தமிழ் மொழி விழா: சிங்கப்பூரில் திருக்குறள் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தமிழ் மொழி விழா: சிங்கப்பூரில் திருக்குறள் விழா

மார்ச் 25,2019  IST

Comments

 

ஆண்டுதோறும் , சிங்கை அரசு ஆதரவுடன் - தமிழ் அமைப்புக்களின் ஒத்துழைப்போடு வளர் தமிழ் இயக்கம் நடத்தும் தமிழ் மொழி விழாவின் முதல் முத்திரைத் திருவிழாவாக , தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம் மார்ச் 23 ஆம் தேதி , எம்.டி.ஐ.எஸ் கல்வி வளாக அரங்கில் திருக்குறள் விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடியது. நாடாளு மன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் . தமிழ் மொழி வாழ்த்துடன் விழா துவங்கியது. நிகழ்ச்சி நினைவு மற்றும் முந்தைய திருக்குறள் போட்டிகளின் காணொளிகள் திரையிடப்பட்டன.பாலர் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளி வரை உள்ள மாணவர்கள் கதை- உரை என மேடையேறி அசத்தினர் . 

முத்தாய்ப்பாக திருவள்ளுவர் விருது வழங்கு நிகழ்ச்சி அரங்கேறியது.” சிங்கப்பூர் சீதக்காதி “ என அன்போடு சிங்கை மக்களால் போற்றப்படும் வள்ளல் ஹாஜி அப்துல் ஜலீல் இவ்வாண்டுக்கான திருவள்ளுவர் விருதாளராக பலத்த கரவொலிக்கிடையே அறிவிக்கப்பட்டார். பொன்னாடை- மலர் மாலை அணிவித்து விருது வழங்கி சிறப்பு விருந்தினர் விக்ரம் நாயர் கெளரவித்தார். தமிழக தன்முனைப்பு - ஆன்மிகப் பேச்சாளர் சுகி சிவம் சிறப்புரை ஆற்றினார். அவருடைய “ வெற்றி நிச்சயம் “ ஆங்கில நூல் விழாவில் அறிமுகம் கண்டது. அவர் தமதுரையில் தமிழனின் மானத்தின் அடையாளம் - உலகம் வியக்கும் நூல் திருக்குறள் என்றார்.குறளின் ஒரு சில அதிகாரங்களையாவது படித்துப் புரிந்திருந்தால் தமிழன் கையில் இந்த உலகமே கிடைத்திருக்கும் என்றார்.

கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தார். ராம்குமார் சந்தானம் - கவிஞர் லலிதா சுந்தர் ஆகியோர் விழாவை நெறிப்படுத்தினர்.ஏற்பாட்டுக் குழுத்தலைவர் ஆனந்த் மித்ரா நன்றி நவில அரங்கம் நிறைந்த விழா இனிதே நிறைவு பெற்றது.


- நமது செய்தியாளர் வெ. புருஷோத்தமன்


Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மே 17 ல் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா- 126 வது ஜெயந்தி விழா

மே 17 ல் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா- 126 வது ஜெயந்தி விழா...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)