ஆம்பலாப்பட்டு- வெற்றிப்பாதையில் ஓர் பயணம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆம்பலாப்பட்டு- வெற்றிப்பாதையில் ஓர் பயணம்

மார்ச் 25,2019  IST

Comments

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு.

( கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?)

இக்குறளுக்குப் பொருத்தமான மனிதர்களைத் தான் சந்திக்கப் போகின்றோம்.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள ஆம்பலாபட்டு கிராமத்தில் ஒரு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இது ஆம்பலாபட்டு, பாப்பாநாடு மற்றும் கரம்பயம் கிராமங்களில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும், மற்றும் வெளியே சென்று தனியார் பள்ளிகளில் படிக்கும்

10 ,11 ,12 ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கான கருத்தரங்கம். பெற்றோர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐம்பதிற்கும் மேற்பட்ட தன்னால்வர்களும், பல ஊர்களில் இருந்து பேனல் உறுப்பினர்களும் இங்கு வந்து சிறப்பாக நடத்திக் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். மாணவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பு நிபுணர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர். நல்ல கருத்துப்பரிமாற்றம் நிகழும் நிகழ்ச்சி.

'இவ்வெற்றிப் பாதையின்' ஒருங்கிணைப்பாளர்களின் உழைப்பு பாராட்டத் தக்கது. அவர்களில் ஒருவரான திரு.கி.வைரக்கண்ணு அவர்களின் மகன் திரு.வெங்கடேஷ் அவர்கள், அமெரிக்கா- டெக்சாசில் உள்ள சான் ஆண்டோனியோவில் வசித்துக் கொண்டே, தான் பிறந்த மண்ணோடும், மக்களோடும் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருகிறார். சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் மூலம் கஜா புயலுக்கு நிதிதிரட்டி, ஒரு பெரும் தொகை இக்கிராமங்களுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத் தக்கது.

அதே போன்று, இந்த கருத்தரங்கம் மற்றும் இனிமேல் நடக்கப் போகும் நலத் திட்டங்களுக்கு நிதிஉதவியாகவும், மக்கள் சக்தி உருவாக்கியும் போற்றுதலுக்குரிய பணியை செய்து வரும் வெங்கடேஷின் கை கோர்த்து,

இதே மண்ணில் பிறந்து வளர்ந்து, இன்று வெளிநாடுகளில் வசிக்கும் இந்த நண்பர்கள் கூட்டம் நிச்சயம் பதிவு செய்யப்பட வேண்டியவர்களே !

அமெரிக்காவில் வசிக்கும், லட்சுமிகாந்தன், சரவணன், திலகர், சிங்கப்பூர்- குமார், சிவாஜி, ஷண்முகப்பிரியா, கத்தார்- தர்மராஜ், துபாய்- புண்ணியமூர்த்தி, லண்டன்- சூர்யமூர்த்தி, சென்னை- கருணாநிதி.

இவர்களோடு, ஊர்ப் பெரியவர்கள்- அப்பாங்கம், சற்குணம், மார்க்ஸ், தர்மலிங்கம், வைரக்கண்ணு மற்றும் பாலசுப்ரமணியன். இவர்கள் அனைவருக்கும் தினமலர் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்கள்.

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

ஏப்ரல் 28ல் நிழல்- நடன அரங்கம்

ஏப்ரல் 28ல் நிழல்- நடன அரங்கம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)