சிங்கப்பூரில் தமிழ் மொழி திறன் போட்டி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் தமிழ் மொழி திறன் போட்டி

மார்ச் 31,2019  IST

Comments

சிங்கப்பூர் தெலுக் பிளாங்கா சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு ஏற்பாட்டில் தொடக்கநிலை மாணவர்களுக்கான தமிழ்மொழித் திறன் இறுதிச் சுற்றுப் போட்டிகள் மற்றும் பரிசு வழங்கு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நாடாளு மன்ற உறுப்பினரும் தெலுக் பிளாங்கா அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான லிம் ஹிங் கியாங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். இப்பகுதியிலுள்ள பல்வேறு தமிழ் அமைப்புக்களின் அடித்தளத் தலைவர்கள் , ஶ்ரீ ருத்ர காளியம்மன் ஆலய மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், மாணவ - மாணவியர் , பெற்றோர் , தமிழ் ஆசிரியர்கள் எனப் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

தெலுக் பிளாங்கா சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு கடந்த 34 ஆண்டுகளாக இத்தகு போட்டிகளை நடத்தி வருவது குறுப்பிடத் தகுந்ததாகும். தொடக்கப் பள்ளி மாணவர்களின் மொழி ஆற்றலை வளர்க்கும் பொருட்டு தொடர்ந்து சிறப்புற நடத்தப்பட்டு வருவது பாராட்டுக்குரியதாகும்.மாணவர்களும், அவர்தம் பெற்றோரும் , தமிழாசிரியர்களும் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர்.இவ்வாண்டு ஶ்ரீ ருத்ர காளியம்மன் ஆலய மேலாண்மைக் குழுவின் பேராதரவோடு , ஆலயப் பல்நோக்கு மண்டபத்தில் தொடக்க சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் 277 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.அதிகப் புள்ளிகள் பெற்ற சுவா சு காங் தொடக்கப் பள்ளிக்கு லிம் ஹிங் கியாங் சவால் கிண்ணம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது .2015 ஆம் ஆண்டு முதல் மாணவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்க போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட தொடக்க நிலை மூன்று வரையுள்ள வகுப்புக்களைச் சார்ந்த ஒரு மாணவருக்கு “ மா துறைக்கண்ணு விருது” வழங்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் தமிழ்மொழி சிறந்தோங்க இச் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு இண்சேவையை சிறப்பாகச் செய்து வருகிறது.இதற்கான ஒத்துழைப்பை நல்கி வரும் பெருமக்களுக்கும், நடுவர்களாகப் பங்கேற்றோர்க்கும், தமிழாசிரியர்கட்கும் தமிழ்மொழித் திறன் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் தெலுக் பிளாங்கா சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுச் செயலாளருமான ச. விஜய் தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறார்.

- நமது செய்தியாளர் வெ. புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மே 17 ல் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா- 126 வது ஜெயந்தி விழா

மே 17 ல் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா- 126 வது ஜெயந்தி விழா...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)