புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழ் காக்கும் அரும்பாடு- ஹூஸ்டன் தமிழ் இருக்கை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழ் காக்கும் அரும்பாடு- ஹூஸ்டன் தமிழ் இருக்கை

ஏப்ரல் 06,2019  IST

Comments

"தமிழன் என்று சொல்லடா,தலை நிமிர்ந்து நில்லடா'-பாரதி.

அவ்வாறு நம் தலை நிமிர்ந்து நிற்பதற்குத் தான், நம் தொன்று தொட்ட உலகின் முதன் மொழி தமிழை, பொக்கிஷமாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்க, ஆன்றோர்களும், சான்றோர்களும் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

நம் இன்றைய தலைமுறையினருக்குச் சான்றாக, அமெரிக்காவில் வாழும் தன்னலம் பாரா தன்னார்வலர்கள், பல நல்ல திட்டங்கள் மூலம் முயற்சிகள் செய்து,செயல்படுத்தியும் வருகின்றனர். அதன் ஒரு மேன்மைமிக்க முயற்சி தான், ஹூஸ்டன் நகர பகுதியில் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென ஒரு இருக்கை அமைத்தல்.

இதற்கான நிதி திரட்ட மார்ச் 24 ஆம் தேதி 'ஹூஸ்டன் தமிழ் இருக்கை குழு மற்றும் ஹூஸ்டன் 'பாரதி கலைமன்றம் ' தலைவர்.திருமதி. பிரியா சந்துரு மற்றும் திரு.ராஜன் ராதாகிருஷ்ணன்- மெட்ராஸ் பெவிலியன், இணைந்து நடத்திய, தமிழ் பாரம்பரியமிக்க 'தமிழ் மண் கமழும் சுவை விருந்து' பாராட்டுக்குரியதாகும். இதில் ஹூஸ்டன் பல்கலைக்கழக கல்வி அதிகாரி திரு.டில்லிஸ், டாம் ரெய்ட்-பியர்லாந்து மேயர், பத்மினி நாதன்-மீனாக்ஷி அம்மன் கோவில் தலைவர், சாம் கண்ணப்பன்- தமிழ் இருக்கை அமைக்க வித்திட்டவர்களில் ஒருவர், தமிழுக்குத் தன்னிகரில்லா சேவையாற்றும் டாக்டர் அப்பன் -ராஜம் அப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

சுவைமிக்க உணவகம் - மெட்ராஸ் பெவிலியன் இணைந்துகொள்ள, நல்லதோர் செயலுக்கு மனதோடு வயிறும் நிறைந்து மக்கள் அளித்த நிதியுதவியுடன் இவ்விழா இனிதே நடந்தேறியது. இன்னும் தொடர்ந்து நிதிதிரட்டும் பணி நடந்துகொண்டிருக்கும்.

'நினைவு நல்லது வேண்டும்

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்'

நிச்சயமாக உலகில் நாகரீகத்திற்கு உதாரணமான நம் தமிழ்மொழி நிலைத்து நிற்க, நாம் காணும் கனவு மெய்ப்படும் !

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)