சிங்கப்பூரில் முத்தமிழ் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் முத்தமிழ் விழா

ஏப்ரல் 08,2019  IST

Comments

  சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் இருபத்து நான்காம் ஆண்டாக தனது முத்திரைத் திருவிழாவாக முத்தமிழ் விழாவை – கல்வி அமைச்சின் தமிழ் மொழி கற்றல் – வளர்ச்சிக் குழுவின் ஏற்பாட்டில் வளர் தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்புடன் உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் கோலாகலமாக நடத்தியது. வளரும் இளம் தாரகைகளின் மொழித் திறன் வளர்ச்சிக்காகத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான கதை சொல்லும் திறன் – பேச்சுத் திறன் போட்டிகளில் இறுதிச் சுற்றில் கலந்து கொண்ட மாணவ – மாணவிகள் மேடையேறி அசத்தினர்.

நடிப்புத் திறன் காட்ட எத்தனை எத்தனை மாறுவேடமணிந்தோரின் அணி வகுப்பு - கண்கொள்ளாக் காட்சி. கண்கவர் சிற்பி நடனக் குழுவினரின் நாட்டியம் என அரங்கம் நிறைந்த தமிழுணர்வாளர்களுக்கு அற்புத விருந்து படைத்து அசத்தினர் நீலவண்ணச் சீருடை எழுத்தாளர் கழகம்.. செல்வி அமிர்தாவின் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது. கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமை ஏற்றார். நாடாளு மன்ற உறுப்பினர்களில் திறன்மிகு இளையராகத் திகழும் முஹமது இர்ஷாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். “ தமிழில் பேசுங்கள் – உங்கள் செல்வங்களை தமிழிலேயே பேச வையுங்கள் – இளைய சமுதாயத்திடம் தமிழைக் கொண்டு சேர்க்க ஒன்றுபட்டு உழைப்போம் “ என பலத்த கரவொலிக்கிடையே தமது உரையை நிறைவு செய்தார்.

பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ – மாணசிவிகளுக்குச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கி சிறப்பு விருந்தினர் கவுரவித்தார். ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளைத் தலைவர் முனைவர் க.சுபாஷினி சிறப்புரை ஆற்றுகையில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே வணிகத் தொடர்பு கொண்டது நம் தமிழ் மொழி. கடல்வழிப் பயணத்தால் வேரூன்றிக் கொண்டது. கிறித்துவம் தமிழை வளர்த்த பாங்கையும் குறிப்பிட்டார். கொல்லத்தில் தம்பிரான் வணக்கம்வழி அச்சேறிய முதல் தமிழ் நூல் பற்றியும் விளக்கினார். தமிழகத்தில் காணப்படாத ஆவணப் பதிவுகள் ஐரோப்பிய மண்ணில் உள்ளன என்றார். 1740 ஆம் ஆண்டே ஜெர்மனி தமிழுக்கு இருக்கை தந்தது எனப் பெருமையோடு அவர் குறிப்பிட்டபோது அரங்கமே அதிர்ந்து வரவேற்றது.

முத்தாய்ப்பு நிகழ்வாக இவ்வாண்டுக்கான தமிழவேள் விருது முதுபெரும் எழுத்தாளர் எம்.கே.நாராயணனுக்கு வழங்கப்பட்டது. அவர் சார்பில் அவரது மனைவியாரும் மகன் போராசிரியர் கணபதியும் பெற்றுக்கொண்டனர். கழகப் பொதுச் செயலாளர் சுப.அருணாசலம் வரவேற்புரை ஆற்றியதோடு மோனா லிசாவுடன் இணைந்து நிகழ்வினையும் நெறிப்படுத்தினார். துணைச் செயலாளர் கிருத்திகாவின் நன்றியுரையுடன் முத்தமிழ் விழா நிறைவு கண்டது.


- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)