சிங்கப்பூரில் தமிழ்மொழி விழா கோலாகலம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் தமிழ்மொழி விழா கோலாகலம்

ஏப்ரல் 09,2019  IST

Comments

சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக கல்வி அமைச்சு மற்றும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஒத்துழைப்போடு வளர் தமிழ் இயக்கம் நடத்தும் தமிழ்மொழி விழா மார்ச் 24 ஆம் தேதி “ மீடியாகார்ப் “ அரங்கில் நேரலையாகத் தொடக்கி வைக்கப்பட்டது. ஆட்டம் – பாட்டம் – கொண்டாட்டம் என அமைந்த இவ்விழாவைத் தொடக்கி வைத்து உரையாற்றிய தகவல் தொடர்பு மற்றும் வர்த்தகத் தொழில்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இவ்விழா மாணவர் – இளையர் மற்றும் பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதென்றும் சிங்கப்பூரில் தமிழ் ஒரு வாழும் மொழி என்பதனை நிலைநாட்டி உலகிடைத் திகழ்ந்து வருவதையும் பெருமிதத்துடன் சுட்டிக் காட்டினார்.

ஆண்டுக்கு ஆண்டு நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாண்டு 43 ஆமைப்புக்கள் 46 நிகழ்வுகளை நடத்துகின்றன. மார்ச் 24 ஆம் தேதி தொடங்கும் இவ்விழா ஏப்ரல் 28 வரை தொடர்ந்து நடைபெறும். சென்ற ஆண்டைவிடக் கூடுதலாக ஒரு கிழமை நடத்தப்படுவது குறிப்பிடத் தகுந்ததாகும். இவ்வாண்டு தகவல் தொழில் நுட்பப் பயன்பாடு மேலோங்கி நிற்கிறது. மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் படைப்பாளர்களாகவும் பங்கேற்பாளர்களாகவும் ஆர்வத்தோடு திகழ்கின்றனர்.

வளர் தமிழ் இயக்கத் தலைவர் ரா.ராஜாராம் நமது செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது தமிழ் சமுதாயத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பயனுடையதாக இவ்விழா விளங்கும் என்றார். “ தமிழை நேசிப்போம் – தமிழில் பேசுவோம் “ என்ற முழக்கத்தோடு தொடர்ந்து நடைபெற்று வரும் இவ்விழா வளரும் எதிர் காலத் தலைமுறையினருக்கு பல ஆக்ககரமான செயற்பாடுகளை முன்னிறுத்தியுள்ளது. “ சொல் வளக் கையேடு “ இதற்கு ஒரு உதாரணமாகும்.

வளரும் இளையர்களான சுந்தர் – ஹரிணி – அஷ்விணி போன்றோர் கணினித் தொழில் நுட்பப் பயன்பாட்டைக் கொண்டு “ இன்ஸ்ட்டாகிராம் “ மூலம் தொடர்பைக் கையாளுகின்றனர். முகநூல்வழியும் நிகழ்வுகள் தெரிவிக்கப்படுகின்றன. கலை – கலாச்சாரம் – வரலாறு – பண்பாடு – பொம்மலாட்டம் போன்ற கிராமியக் கலைகளும் இடம் பெற்றுள்ளன. முதல்முறையாகப் பங்கேற்ற இந்திய நுண்கலைக் கழகம் “ நிலமடந்தை “ என்ற நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தியது. கவிமாலை அமைப்பு கவிதையும் கானமும் என்ற தலைப்பில் நிகழ்வை நடத்தி கவிதைப் பட்டறை மூலம் 150 கவிஞர்களைப் பங்கேற்கச் செய்தது. இறுதிச் சுற்றுக்காக ஐவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திருமுறை கண்ட சோழன் என்ற தலைப்பில் பொம்மலாட்ட நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. ஏராளமான புதிய அம்சங்கள் அறிமுகமாகின்றன. பள்ளிச் சூழல்வழி மாணவர்களின் காணொளிக் காட்சிகள் வியப்பூட்டுபவையாக இருக்கும். ஐந்து கிழமைகள் சிங்கப்பூரில் தெருவெல்லாம் தமிழ் முழக்கமே. மகாகவி பாரதி கண்ட தமிழ்க் கனவு நனவாக வளர் தமிழ் இயக்கம் பல்வேறு நிகழ்வுகளை தமிழ் அமைப்புக்கள்வழி நடத்தவிருக்கின்றது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)