அமெரிக்காவில் திருக்குறள் விளையாட்டு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அமெரிக்காவில் திருக்குறள் விளையாட்டு

ஏப்ரல் 15,2019  IST

Comments

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். இந்த 616ஆம் குறளை தமிழ் நாடு அறக்கட்டளை - ஹூஸ்டன் கிளை கடந்த வார இறுதி (ஏப்ரல் 6-7) மீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டியது. திருக்குறள் விளையாட்டு என்ற பெயரில், தமிழ் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக ஒரு போட்டியை தமிழ்நாடு அறக்கட்டளை-ஹூஸ்டன் கிளை நடத்தியது. இந்த இரு தினங்களில், ஹூஸ்டன் மற்றுமல்லாது, சுகர்லேண்ட், கேட்டி , சைப்ரஸ், போமான்ட், போன்ற நகரங்களில் இருந்தும் பிள்ளைகள்-பெற்றோர்கள் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

அதிகமான குறளையும் அதன் பொருளையும் கூறும் சிறார் மற்றும் 18 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு, ஒரு குறளுக்கு ஒரு டாலர் என்ற பரிசை வாரி வழங்கியது தமிழ்நாடு அறக்கட்டளை. அதுமட்டுமல்லாமல், அதிகமான குறள்களை விளக்கிய பிள்ளைகளின் தாய்மார்களுக்கு திருவள்ளுவரின் உருவம் நெய்யப்பட்ட பிரத்தியேக புடவை ஒன்றை பரிசாக வழங்குகிறது. இந்நிகழ்ச்சியை நேரில் கண்டவர்கள், தமிழன் என்ற பெருமிதத்தில் திளைத்தார்கள் என்றால் அது மிகை ஆகாது.

இதுகுறித்து தமிழ்நாடு அறக்கட்டளை-ஹூஸ்டன் கிளையின் தலைவி மாலா கோபால், ' இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே இயற்றப்பட்ட திருக்குறள் இன்றும் நம் வாழ்விற்கு பொருந்துமாறு இருப்பது வியக்கத்தக்கதே. இப்படி ஒரு பொக்கிஷத்தை நமக்காக விட்டுச்சென்ற திருவள்ளுவருக்கு நன்றி சொல்ல தமிழர்கள் மட்டுமல்லாது இந்தியர்களாக நாம் கடமைப்பட்டிருக்கிறோம். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. திருவள்ளுவர் நமக்கு செய்த இந்த பெரும் உதவியை நாம் ஈடு செய்ய ஒரே வழி, அவர் நமக்கு போதித்த திருக்குறள்களின் சிறப்பை நம் சந்ததியினருக்கு அறிவூட்டுவதே. ஐந்தே வயதான ஒரு பிள்ளை 430க்கும் மேலாக குறள்கள் கூறியது மெய்சிலிர்க்க வைக்கிறது ' என்று கூறினார்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அன்னையர் தின விழாவில் கொடுக்கப்படும். இந்த விழா மே மாதம் ஐந்தாம் தேதி மதியம் மூன்று மணி அளவில் வெஸ்ட்ச்செஸ்டர் அகாடெமி, 905 யார்க்செஸ்ட்டர் டிரைவ், ஹூஸ்டன் 77079ல் நடைபெற உள்ளது. இந்த விழாவை தமிழகத்திலிருந்து உமையாள் என்ற இளம் பேச்சாளர் சிறப்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் அனைவரின் வரவையும், பங்கேற்ப்பினையும் தமிழ் நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் கிளையின் அலுவலர்கள் எதிர்நோக்குகின்றனர்.

- தினமலர் வாசகர் தங்கராஜ் பேச்சியப்பன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

ஏப்ரல் 28ல் நிழல்- நடன அரங்கம்

ஏப்ரல் 28ல் நிழல்- நடன அரங்கம்...

ஏப்ரல் 20, 21ல் திருமுறை இசை

ஏப்ரல் 20, 21ல் திருமுறை இசை...

ஏப்ரல் 21ல் சுழலும் சொற்போர் இலக்கிய விழா

ஏப்ரல் 21ல் சுழலும் சொற்போர் இலக்கிய விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)