தவத்தால் கிடைத்த சிவதாண்டவம் - டான்சர் பிரேம்குமார் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தவத்தால் கிடைத்த சிவதாண்டவம் - டான்சர் பிரேம்குமார்

ஏப்ரல் 16,2019  IST

Comments

  

ஒன்றா,இரண்டா இருபது வருட நடனவாழ்க்கை ! ஏழு வயதிலிருந்து ஆட ஆரம்பித்த கால்கள், இன்றும் ஆடிக்கொண்டிருந்தது, இன்னும் ஆடும் என்கிறார் டான்சர் பிரேம்குமார் பழனி.

பள்ளிப்பருவத்தில் நடன விடீயோக்களில் பார்த்துக் கற்றுக்கொள்ள ஆரம்பித்து, ஆர்வம் அதிகமாக கொஞ்ச நாள் பரதநாட்டியமும் கற்று, பின் அதனை தொடரமுடியாத சூழ்நிலையில், மேற்கத்திய நடனம் கற்க முடிவு செய்தார். சிலவருடங்கள் பாப்,ஜாஸ்,பாப்பி,பிரேக்ஸ்,பிரேக்டான்ஸ்,ஹிப்ஹாப்', காண்டெம்ப்ரரி,சால்சா போன்ற நடனக்கலைகளை 'தேவ் டான்ஸ் அகாடமி' பள்ளியில் கற்றுக்கொண்டார்.

தங்கள் நடனப்பள்ளியில் பலவித குழுக்களுடன் ஆடியதில் நிறைய பயிற்சிகளும் கிடைக்க, சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் இன்டெர்-காலேஜ் போட்டிகள், படிப்படியாக ஸ்டார் நிகழ்ச்சிகள்,முக்கியமாக 'மணிரத்னம்' ஸ்டார் ஷோ என தன்னை மெருகேற்றிக் கொண்டார். தவிர கணக்கில்லா நிகழ்ச்சிகளுக்கு கோரியோகிராபராக பணிபுரிந்துள்ளார். விஜய் டீவியில் 2007 ல் செயின்ட் ஜோசப் ஆப் இன்ஜினீரிங் வந்து கலந்துகொள்ளும்போது அந்நிகழ்ச்சியை இயக்கவும் செய்து, குழுநடனத்தில் பங்கும் கொண்டு வெற்றிபெற்று டைட்டிலும் வென்றுள்ளார்.

பல கல்லூரிகளில் நடனப் பயிற்சி கொடுத்தும்,இயக்கியும்,நடனத்தில் வித்தியாசங்களைக் கொண்டுவந்தும் கிட்டத்தட்ட 100 நடனநிகழ்ச்சிகள் செய்த அனுபவத்தையுடையவர். பின் தன் படிப்பு முடித்து,வேலையில் அமர்ந்தபின் பத்து வருடங்கள் நடனம் இல்லா வாழ்க்கையாகிப்போனது. சான் ஆண்டோனியோ வந்த பின் செல்வகுமார சாமி எனும் ஓர் இளைஞன் தனக்கு நடனம் சொல்லித்தரத் தூண்டவே, தூங்கவிடாத கனவான தன் மனத்துக்குப் பிடித்த நடனத்தை தொடரும் வாய்ப்புக்கிடைக்க, கடந்த மூன்றரை வருடங்களாக மீண்டும் ஆரம்பித்துள்ளார். 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தல், இங்குள்ள சங்கங்களிலும்,பல போட்டிகளிலும் கலந்து கொள்ளுதல் என உத்வேகமாக சென்று கொண்டிருக்கிறது நடனவாழ்க்கை.

2018 ல் ஆஸ்டினில் நடந்த 'ஸ்டார் காலாகார்’ நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் சான் ஆண்டோனியோவை பல வெற்றிகளை பெறச் செய்தார். அதில் தான் பங்குகொண்ட'சிவபெருமானின் சிவதாண்டவம்' தனக்கு, இன்று வரை ஏகப்பட்ட பாராட்டுகளை அள்ளிக்குவிப்பதாக உணர்கிறார். மிகக் கடினமான அந்நடனம் பலவித முயற்சிகள்,பயிச்சிகள் மூலம் இன்று அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தன் நடனநண்பர்களையும், தன் குருவான 'தேவானந்தம்' அவர்களையும் நன்றியுடன் நினைவு கொள்கிறார். மேலும் திருவான்மியூரில் உள்ள 'ஆரத்தி' நடனப்பள்ளியிலும் நிறையக்கற்றுக் கொண்டுள்ளார்.

இந்திய அசோஸியேஷன் விழாவில் அனைவரையும் ஈர்த்த மிகப்புதுமையான ஒரு நிகழ்ச்சி வழங்கினார்.

மனைவி மற்றும் தன் இரு குழந்தைகளுடன் வாழும் இவர், தன் வாழ்வின் நோக்கம், ஒரு மிகப்பெரிய நடனப்பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்பதே. தற்போது இவரிடம் 20 மாணவர்கள் பயின்று கொண்டிருக்கிறார்கள். கிடைத்த பாடல்களுக்கு நடனம் அமைப்பதில்லை இவர், தானே ஒரு கதைவடிவம் கொடுத்து பயிற்சிகொடுப்பதால், வித்தியாசமான அனுபவங்களையும், ஆச்சரியங்களையும் பார்வையாளருக்கு கொடுக்கிறார்.

சிவனின் தீவிர பக்தரான இவரது சிவதாண்டவ நடனம், இவர் வாழ்க்கையில் ஓர் மைல்கல். இக்குழு கலந்துகொண்ட அனைத்து மேடைகளிலும், மிகுந்த உருக்கமான பாராட்டுக்களை பெற்றுத் தந்துள்ளது. இனி வரும் காலத்தில் நிறைய பெரிய நடனப்போட்டிகளில்,தன் குழுவோடு சேர்ந்து கலந்து கொள்ளும் திட்டத்தில் உள்ளார்.

பிரேம்குமாரின் முழு உழைப்பும், தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும் பல வெற்றிகளைக் குவிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us