பிரிஸ்பேன் ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரிஸ்பேன் ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் திருவிழா

ஏப்ரல் 19,2019  IST

Comments

  

பிரிஸ்பேனின் புறநகர்ப் பகுதியான தெற்கு மெக்லீனில் அமைந்துள்ள ஶ்ரீ செல்வ விநாயகர் கோவிலில், 2015 நடைபெற்ற குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் 12-நாள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.


நான்காம் ஆண்டான இந்த ஆண்டின் திருவிழா, கொடியேற்றத்துடன் பங்குனி 24, (07 ஏப்ரல் 2019) துவங்கியது. ஒவ்வொரு நாளும் அபிசேடம், யாக பூசை, கொடிமர பூசை, வசந்த மண்டப பூசை, உற்சவமூர்த்தியின் உள்- மற்றும் வெளிப்பிரகார திருவீதி உலா என பலவித நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தவிர, சிறப்புத் திருவிழாக்களாக 6-ம் நாள் மாம்பழ திருவிழாவும், 7-ம் நாள் வேட்டை திருவிழாவும், 8-ம் நாள் சப்பறத் திருவிழாவும், 9வது நாள் தேர்த்திருவிழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 10-ம் நாள் தீர்த்தத் திருவிழாவுடன் கொடியிறக்கமும், 11ம் நாள் பூங்காவனத் திருவிழாவும், 12வது நாள் வைரவர் பூசையுடன் திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

வேத மந்திரங்களினூடே தேவாரப் பதிகங்களும், பஞ்சபுராணங்களும் ஓதப்பட்டன. விழாவையொட்டி பக்திப்பாடல்கள் (பஜனை), வாத்திய இசை, நடனம், நாட்டியம், பொய்க்கால் குதிரை, புலியாட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. தேர்த்திருவிழாவின் போது பக்தர்கள் காவடி - பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், சிதர் தேங்காய் உடைத்தும் தங்களது வேண்டுதல்களைப் பூர்த்தி செய்தனர். பன்னிரு நாட்களும் தவில்-நாதஸ்வர கலைஞர்கள் அயராது இசைத்தனர். பூசைகளை, பிரம்மஶ்ரீ சாந்தரூப சிவாச்சாரியாரும், சிவஶ்ரீ ஈஸ்வரநிவாச சிவாச்சாரியாரும் முன்னின்று நடத்தினர்.

ஒவ்வொரு நாள் திருவிழாவையும் பிரிஸ்பேன் நகர் - புறநகர் பகுதிகள், பொற்கரை மற்றும் குயின்லாந்து மாநில வெளியூர்களை பூகோளரீதியாக பலபகுதிகளாகப் பிரித்து, ஆங்காங்கே வாழ்ந்து வரும் தன்னார்வல பக்தர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கபட்டன. தவிர, ஆலய நிர்வாகக் குழுவினரும், இளைஞரணியினரும், மேற்சொன்ன குயின்ஸ்லாந்து மாநில தன்னார்வலர்களுடன் ஒவ்வொரு நாள் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, அன்றாட பூசைகளையும்; திருவீதிஉலா மற்றும் தேரோட்டத்தின் போது பக்தர்களுக்கு பிரசாதங்கள், நீர்மோர், பானகம், குளிர்பானங்களையும்; மாலை - இரவு ஆக இரு வேளைகளிலும் உணவு பரிமாரியும், திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற பெரும்பங்காற்றினர்.

இத்திருவிழா மிகச் சிறப்பாக நடந்தேற, இந்து ஆலய சங்க நிர்வாகக் குழுவினரின் அயராத உழைப்பும், தன்னார்வலர்களின் பொருளுதவியுடன் தன்னலமற்ற சேவையும், பக்தர்களின் பங்களிப்பும் ஒருசேர அமைந்திருந்ததென்றால், அது மிகையாகாது.

- நமது செய்தியாளர் ஆ.சோ.ரெங்கநாதன்


Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)