அமெரிக்காவில் தமிழர்களுக்கென உருவான ஓர் வலைத்தளம்-வணக்கம் அமெரிக்கா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அமெரிக்காவில் தமிழர்களுக்கென உருவான ஓர் வலைத்தளம்-வணக்கம் அமெரிக்கா

ஏப்ரல் 18,2019  IST

Comments (1)

நல்ல விதைகள் பயன் தரும் விருட்சங்களாகின்றன. அப்படி ஒரு விருட்சம் தான் 'வணக்கம் அமெரிக்கா' எனும் இந்த வலைத்தளம்.

ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பன்று இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் சமூக வலைத்தளத்தில் இதனை வெளியிட்டார்.

யாராலும் நினைத்துப் பார்த்திராத ஒரு நல்ல செயலுக்காக, தமிழ்மக்களுக்கு உதவ ஆரம்பித்து, பின் அதனையே விரிவாக்கி அமெரிக்காவில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் உலகம் அனைத்திற்கும் கொண்டு செல்லும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப் பட்டதே 'வணக்கம் அமெரிக்கா'.

முதலில் வெளிநாட்டில் வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள், அசாதாரண சம்பவங்களை எதிர்கொள்ள உதவுதல், அவசரநிலைகளில் தொடர்புகொள்ள வேண்டிய வழிமுறைகள் என மிக முக்கிய நிகழ்வுகள் பல செய்துகொண்டே இருந்தது இங்குள்ள தன்னிகரில்லாத் தன்னார்வலர்குழு. அதனை மேலும் பல நல்ல காரியங்களுக்கு பயன் படுத்தவும் உருவானது தான் 'வணக்கம் அமெரிக்கா'.

மேலும் அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்கள், அதன் செயல்பாடுகள், தனிப்பட்ட முறையில் இயங்கும் தமிழ்க்குழுக்களின் சேவைகள், கல்வி,வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள், மேலும் சுவாரசியமான செய்திகள் என அனைத்தும் ஜனரஞ்சகமாக உலகமக்கள் விரும்பும் வகையில் இவ்வலைத்தளம் செயல்படும். இந்தியாவிலிருந்து தேவைப்படும் வீடியோக்களும் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு,இங்கு உள்ளோர் மற்ற வேலைகளை செய்கிறார்கள்.

இதைத் தவிர சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்வுகள் போன்றும் உடனுக்குடன் வெளியிடப்படும். இவ்வலைத்தளத்தில் மட்டுமின்றி, ட்விட்டர், முகநூல், யு டியூப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இது இயங்கும். அமெரிக்காவில் நடக்கும் அனைத்து நல்ல நிகழ்வுகளும் மற்ற சமூக வலைத்தளங்களிலும் பகிரப்படும்.

முக்கிய சிறப்பு என்னவென்றால் முதன் முதலில் அமெரிக்காவிலேயே தமிழர்களுக்காகத் தொடங்கப்பட்ட ஒரு வெப்சைட் 'வணக்கம் அமெரிக்கா'. அமெரிக்காவில் படமோ,குறும்படமோ எடுக்கவிரும்புவோர் இவர்களை அணுகலாம்.

எத்தனையோ மிக நல்ல விஷயங்கள்,பிறர் பார்வைக்கு காதுகளுக்கு வராத செய்திகள் இனி நம்மை வந்து சேரும் என்பதில் ஐயமில்லை.

'வணக்கம் அமெரிக்கா' மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

-நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மே 17 ல் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா- 126 வது ஜெயந்தி விழா

மே 17 ல் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா- 126 வது ஜெயந்தி விழா...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

Advertisement
Advertisement
Advertisement

திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: ஓட்டு எண்ணுமிடத்தில் திமுக முகவர்கள் கவனத்துடன் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்டாலின் ...

மே 20,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
n.jebamoni - west palmbeach,United States
19-ஏப்-201906:27:03 IST Report Abuse
n.jebamoni முதலில் இந்திய தூதரகங்களின் இந்தியைத்திணித்து, குறிப்பாக தமிழைத்ததவற்கும் நிலையை இந்த ஊடகம் என்ன செய்யப்போகிறது?
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us