ஷார்ஜாவில் பாதிக்கப்பட்ட தமிழக தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஷார்ஜாவில் பாதிக்கப்பட்ட தமிழக தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஏப்ரல் 20,2019  IST

Comments

ஷார்ஜா : ஷார்ஜாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஏட்டு தொழிலாளர்கள் தங்களது நிறுவனம் சம்பளம் வழங்கப்படாததால்தொ ழிற்பேட்டை பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

விருத்தாச்சலம் அருகில் உள்ள ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த கனகசபை உள்ளிட்ட எட்டு பேர் கடந்த ஆண்டு டிசம்பர்மாதம் ஷார்ஜாவில் உள்ள அல் மிராஸ் டெக்னிக்கல் சர்வீசஸ் நிறுவனத்துக்கு வேலைக்கு வந்தனர். இந்த நிறுவனம் மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த சசிதரன் என்பவருக்கு சொந்தமானது ஆகும். இந்த நிறுவனத்துக்கு வேலைக்கு வர சுமார் 67,000 வரை ஒவ்வொருவரும் பணத்தை கட்டியுள்ளனர்.

தற்போது அந்த நிறுவனம் கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனையடுத்து கம்பெனி நிர்வாகம் முறையான பதிலை வழங்க வில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த தொழிலாளர்கள் அமீரக அரசின் தொழிலாளர் நலத்துறையில் புகார் செய்தனர்.


இந்த புகாரை செய்ததால் கம்பெனி நிர்வாகம் அவர்களை தொழிலாளர் முகாமில் இருந்து விரட்டி விட்டது.


இதனால் இந்த எட்டு பேரும் சார்ஜா தொழிற்பேட்டையில் உள்ள பள்ளிவாசல் அருகில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


அவர்களை கேரள மாநில வழக்கறிஞர் அலவி சந்தித்து பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார்.


அதன் பின்னர் கேரள முஸ்லிம் கல்சுரல் செண்டர் மூலம் சார்ஜா இந்தியன் அசோஷியேசன் மூலம் உதவிட கோரிக்கை


விடுக்கப்பட்டது.


இந்த கோரிக்கையை தொடர்ந்து சார்ஜா இந்தியன் அசோஷியேசன் தமிழக தொழிலாளர்களின் நிலைமையை


கருத்தில் கொண்டு இலவசமாக விமான பயண சீட்டு வழங்கியது.


இதனையடுத்து அவர்கள் கடந்த 16-ஆம் தேதி இண்டிகோ விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


இதனால் தமிழக தொழிலாளர்கள் அந்த அமைப்புக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றனர்.

----- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

Advertisement
Advertisement
Advertisement

ஜெட்லி உடல்நிலை: மத்திய அரசு விளக்கம்

புதுடில்லி: ஜெட்லி உடல்நிலை குறித்து மீடியாக்களில் வெளியான செய்தி தவறானது மற்றும் ஆதாரமற்றது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

பா.ஜ., மூத்த தலைவர்களில் ...

மே 26,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)