பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா

ஏப்ரல் 20,2019  IST

Comments

 

பஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா, செயல்வீரர்கள் கூட்டம், சித்திரை திருவிழா என முப்பெரும் விழாவாக கடந்த வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல், 2019 அன்று சுகாயா உணவக உள்ளரங்கில் நடைபெற்றது. சங்க உறுப்பினர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவின் உறுப்பினர்கள் குத்துவிளக்கு ஏற்றினர். பொது செயலாளர் க. செந்தில்குமார் வரவேற்ப்புரை வழங்க முழு நிகழ்வையும் மூத்த உறுப்பினர் பவானி பிரேமானந்த் தொகுத்து வழங்கினார்.

2018 – 2019 வருடத்திற்கான செயல்வீரர்களாக பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவின் அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன், ஔவையார் கல்விக்கூட ஆசிரியர் ஷர்மிளா ஜெயகுமார், சங்க செயற்குழு உறுப்பினர்கள் பஞ்சு இராஜ்குமார், முகமது அபுசாலி, மு. அப்துல் பாஸித், எல். ஜெகன் குமார், எஸ். கண்ணன், மதன்குமார் செல்லம், நே.கி. பிரவீண், பா. பாபு பாண்டியன், செ. கார்த்திக், சே. சரவணன், தமிழர் கலை மீட்புக் குழுவின் அமைப்பாளர் ரா.சு. பிரதீப் மற்றும் உறுப்பினர்கள் ரா. வைத்தீஸ்வரன், இ. ராஜாங்கம் ஆகியர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பல்வேறு முன்னணி நிறுவனங்களின் சலுகைகள் அடங்கிய புதிய உறுப்பினர் அடையாள அட்டையை சங்க தலைவர் முனைவர். பெ. கார்த்திகேயன் மற்றும் பொது செயலாளர் க. செந்தில்குமார் ஆகியோர் வெளியிட மூத்த உறுப்பினர் க. கண்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டார். உறுப்பினர் நலத்துறை இணை செயலாளர் மு. தாமரைக்கண்ணன் பேசும்போது “சங்க உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்திய உணவகம், ஆபரணக் கடை, மருத்துவமனை, புத்தகக்கடை, விளையாட்டு அரங்கம், மருந்துக் கடை, வாகன பளுதகற்றும் நிறுவனங்கள், காப்பீடு நிறுவனம், கார்கோ நிறுவனம், பண பரிமாற்ற நிறுவனங்கள், சுப்பர் மார்கெட் உள்ளிட்ட 18 முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தை செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

பின்பு ஆடல் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்சிகளுடன் சங்க தலைவர் முனைவர். பெ. கார்த்திகேயன் தலைமையில் “குடும்ப வாழ்க்கையில் அதிக சவால்களை சமாளிப்பது ஆண்களே பெண்களே” என்ற தலைப்பில் சிரிக்க சிந்திக்க நகைசுவை பட்டிமன்றம் நடைபெற்றது. சங்க வேலை வாய்ப்புத்துறை செயலாளர் மு. முகமது அபுசாலி நன்றியுரை வழங்கினார். கலந்துகொண்ட அனைவருக்கும் வாழை இலையில் பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டு விழா ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us