அட்லாண்டா லட்சுமி தமிழ் பயிலும் மையம் - ஆண்டு விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அட்லாண்டா லட்சுமி தமிழ் பயிலும் மையம் - ஆண்டு விழா

ஏப்ரல் 21,2019  IST

Comments

தமிழின் பெருமை உலகமெங்கும் பரவவேண்டும் என்ற பாரதியாரின் கனவு மெய்ப்படும் வகையில் அட்லாண்டா நகரில், கடந்த 33 வருடங்களாகக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பித்து வரும் லட்சுமி தமிழ் பயிலும் மையத்தின் ஆண்டு விழா மார்ச் 30, 2019 அன்று சின்மயா நிகேதனில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கிய விழாவை, மாணவிகள் நேத்ரா மற்றும் ஹரிணி அழகுறத் தொகுத்து வழங்கினர். திரு. ஜார்ஜ் மனோகரன் வரவேற்புரையை வழங்கினார். பின்னர் விழாவிற்குத் தலைமை வகித்த, மண்ணியல் வல்லுநர் திரு. கணபதி சண்முகம் அவர்கள் உரையாற்றுகையில், முதல்வர் திருமதி. லட்சுமி சங்கர் அவர்கள் ஆற்றி வரும் தமிழ்த் தொண்டைப் பாராட்டியதோடு தமிழின் தொன்மையையும் பெருமையையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மண்ணியல் சார்ந்த பல சுவாரசியமான தகவல்களை மிக எளிமையான முறையில் விளக்கியதோடு மாணவர்களின் கேள்விகளுக்கும் உற்சாகமாக விடையளித்தார்.

அதன் பின்னர் மாணவர்கள் அனைவரும் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளை வழங்கினர். சிறுமிகள் கோலாட்டம், பாலர் நடனம், பியானோ மற்றும் வயலின் இன்னிசை, பாட்டு, பேச்சு, நாடகம், மழைப் பாடல், நடனம், நகைச்சுவைத் துணுக்குகள் என்று நிகழ்ச்சிகள் அனைத்துமே பார்வையாளர்களின் கண்களுக்குக் கலை விருந்தாய் அமைந்தன. முன்னாள் மாணவி அக்ஷரா, தனது மலரும் நினைவுகளை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். திருமதி. ஜெயா மாறன், 'தமிழும் இலக்கியமும்' என்ற தலைப்பில் சொற்சுவையும் பொருட்சுவையும் ததும்ப அருமையாக உரையாற்றினார்.

மாணவர்கள் வழங்கிய 'அமெரிக்க அரசியலமைப்புச் சட்டதிருத்தங்கள்' குறித்த நாடகமும், கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட 'அறுமுகனும் அறுபடை வீடும், அருணகிரியும்' என்ற கதாகாலட்சேபமும், ஆசிரியைகள் வழங்கிய திருக்குறள் பாடல்கள் கொண்டு அமைக்கப்பட்ட பின்னல் கோலாட்டமும் காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. பின்னர் திரு. கணபதி சண்முகம் அவர்கள் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களையும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுக் கோப்பைகளையும் வழங்கினார். இறுதியாக திருமதி. கிருத்திகா நடராஜன் நன்றியுரை வழங்க, தேசபக்திப் பாடலுடன் விழா இனிதே நிறைவுற்றது. கி

- தினமலர் வாசகி கிருத்திகா நடராஜன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

Advertisement
Advertisement
Advertisement

ஓட்டு எண்ணிக்கை: சாஹூ விளக்கம்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது: தமிழகத்தில் 45 ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தபால் ஓட்டு, ...

மே 22,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us