குவைத், பாவேந்தர் கழகத்தின் “களம்-73” | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குவைத், பாவேந்தர் கழகத்தின் “களம்-73”

ஏப்ரல் 21,2019  IST

Comments

குவைத், பாவேந்தர் கழகத்தின் “களம்-73” முப்பெரும் விழாவாக மங்காஃப் பாவேந்தர் அரங்கில் கடந்த 12-04-2019 வெள்ளி மாலை 5.00 மணிக்குத் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் அபுதாகீர் (மேனாள் தலைவர்) நிகழ்வை மிகச்சிறந்த முறையில் தொகுத்து வழங்கினார். நம் பாரம்பரிய துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாவேந்தர் கழகத்தினர் பாடி முப்பெரும் விழாவை சிறப்பொடுத் தொடங்கினர். அதனைத் தொடர்நது பாவேந்தர் கழக மகளீர் குழுவினரால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு விழா பொலிவுபெறத் தொடங்கியது. மேலும் திருமதி மஞ்சுளா துரைசாமி அவர்கள் களப்பாடலைப் பாடினர்.

செல்வி லக்க்ஷிகா சரவணன் நமது பண்டையக் கலையான பரதநாட்டியத்தை கலைநயதோடும், பாவதோடும் ஆடியது அனைவரையும் மகிழச்செய்தது. நிகழ்ச்சிக்கு முனைவர் ஷாகின்ஷா அவர்கள் தலைமை ஏற்கவும், ஜனாப் முகமது ஆரிப் மரைக்காயர் அவர்கள் முன்னிலை வகிக்கவும் நிகழ்வு முன்னோக்கிச் சென்றது. குறளோடு உறவாடு என்ற தலைப்பின் கீழ் பொறியாளர் இராஜேஷ் அவர்கள் ஒரு குறளும் அதனுடைய விளக்கத்தையும் தெளிவாகவும், அழகாகவும் எடுத்துரைத்தார். திருமதி மஞ்சுளா துரைசாமி, திரு முருகேசன் மற்றும் திரு சண்முகம் ஆகிய மூவரும் இடையிடையே அழகான திரையிசை பாடல்களைப்பாடி சிறப்பித்தனர்.

பாவேந்தர் கழகத்தின் 2019-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளைத் திரு கு. நடராசன் அவர்கள் அறிமுகப்படுத்தினார்; அதன்படி கவிஞர் சிவமணி (தலைவர்), திரு. வாசு இராமநாதன் (துணைத்தலைவர்) பொறியாளர். பத்மநாதன்( பொதுச்செயலாளர்), திரு.முருகேசன் (துணைப்பொதுச்செயலாளர்), பொறியாளர் இராஜேஷ் (பொருளாளர்) மற்றும் திருமதி. பிரியதர்ஷினி குமரேசன் (தகவல் தொடர்புச்செயலாளர்) இவர்கள் அனைவருக்கும் தாயக சிறப்பு விருந்தினர் முனைவர் இரா. மாது அவர்கள் பொன்னாடைப் போர்த்தி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அடுத்த நிழ்வாக, தாயக சிறப்பு விருந்தினர் தலைசிறந்த பேச்சாளர் முனைவர் இரா. மாது அவர்களை திரு. வாசு இராமநாதன் அவர்கள் அறிமுகப்படுத்தி வைக்க, 'நற்றமிழ் நாவேந்தர்' என்னும் சிறப்பு விருதினை வழங்கியும், பொன்னாடைப் போர்த்தியும் பாவேந்தர் கழகம் அணிசெய்து பெருமைக்கொண்டது. நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்துக் கொடையாளர்களுக்கும், தமிழார்வலர்களுக்கும் தாயக சிறப்பு விருந்தினர் முனைவர் இரா. மாது அவர்கள் பொன்னாடை அணிவித்து பெருமைப்படுத்தினார்கள். மனவியல் பூ. காந்திமதி அம்மாள் அறக்கட்டளை பாவேந்தர் கழகத்தோடு இனைந்து நடத்தும் நான்காம் ஆண்டு 'திருக்குறள் போட்டி-2019' கான நிகழ்வை திருமதி சுஜாதா இளங்கோவன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து சிறப்புச்செய்தனர்.

இனிதினும் இனிது: முப்பெரும் நிகழ்ச்சிக்காக இலக்கியச்சிறப்பு பட்டிமன்றம் நடந்தேறியது தலைப்பு: செஞ்சோற்றுக் கடனைச் செலுத்தியதில் விஞ்சி நிற்பது கர்ணனா! கும்பகர்ணனா!! அதில் நடுவராக தாயக சிறப்பு விருந்தினர் தலைசிறந்த பேச்சாளர் முனைவர் இரா. மாது அவர்கள்; கர்ணனே! என்ற அணிக்கு தலைவராக திரு பழ. கிருஷ்ணமூர்த்தி அந்த அணிக்கு வலுச்சேர்க்க கவிஞர் சிவமணி, திருமதி. ரேவதி தமிழ்ச்செல்வன், கும்பகர்ணனே!! என்ற அணிக்கு தலைவராக திரு. வாசு இராமநாதன்அந்த அணிக்கு வலுச்சேர்க்க கவிஞர் சத்தியன், திருமதி அம்புஜலக்ஷ்மி கரிகாலன் இவ்வாறாக இரு அணியினரும் தத்தம் கருத்துக்களை முன் வைத்து சிறப்பாக வாதாடினார்கள். பட்டிமன்றம் மிகக் சிறப்பாகவும், அறிவார்ந்த இலக்கியக் கருத்துக்களைப் பரிமளிப்பதாகவும் இருந்தது. குறிப்பாக நடுவர் முனைவர் இரா. மாது அவர்களின் முன்னுரையும், தீர்ப்புரையும் கொண்டு பட்டிமன்றம் உச்சத்தைத் தொட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டுப்பண்ணுடன் சுவையான இரவு விருந்தை வழங்கியதோடு விழா இனிதே நிறைவடைந்தது.

- தினமலர் வாசகர் வாசு இராமநாதன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)