நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் சித்திரை இசை விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் சித்திரை இசை விழா

ஏப்ரல் 22,2019  IST

Comments

நியூசெர்சி வாழ் தமிழர்களைத் தமிழ் மொழி மூலம் ஒன்றிணைத்து, பண்பாடு , இலக்கியம் மற்றும் தமிழ்க் கலைகளை வளர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள நியூசெர்சி தமிழ்ப் பேரவை தனது முதல் நிகழ்ச்சியான சித்திரை இசை விழாவை ஏப்ரல் மாதம் 13 ஆம் நாள், எடிசன் நகரில் உள்ள ஜே.பி. ஸ்டீபன்ஸ் உயர் நிலைப் பள்ளி அரங்கில் வெகு விமர்சையாகக் கொண்டாடியது.

இதில் வாழையிலை விருந்துடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் காண்போர் மனதைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் நடைப் பெற்றது. நண்பகல் சுமார் 2:30 மணி அளவில் தவில் மற்றும் நாதசுவர இசையுடன் விழா மங்கலமாகத் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாவேந்தர் பாரதிதாசனின் 128 ஆம் பிறந்த தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கான 'பாவேந்தர் கவிமேடை' சிறப்பு நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் புரட்சிக் கவிஞர் பாவேந்தரின் பல்வேறு உணர்ச்சி மிகுக் கவிதைகளைத் தங்குத் தடையின்றி, அழகிய தமிழில் நமது குழந்தைகள் ஒப்புவித்த விதம் காண்போர் அனைவரையும் நெகிழச்செய்தது. தொடக்க நிலை 1 - 2, இடை நிலை மற்றும் உயர் நிலை என்று 4 பிரிவுகளில் எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நியூ செர்சியின் சிறந்த தம்பதியர்களுக்கான "திருமதி/திருவாளர் நியூசெர்சி” போட்டி நடைப்பெற்றது. இதில் போட்டியாளர்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து, பாரம்பரிய உணவு வகைகள் சமைத்து, ஆடி பாடி போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர். நிகழ்ச்சிகளுக்கு இடையே நடைபெற்ற குறுக்கெழுத்துப் போட்டி பார்வையாளர்களின் நேரத்தைப் பயனுள்ளதாக்கியது.

இதனைத் தொடர்ந்து பேரவைப் பாடகருக்கான இறுதிச் சுற்றுப் போட்டி நடைப் பெற்றது. இதில் போட்டியாளர்கள் பங்குபெற்று இசை மழையில் நனைய வைத்தனர். வாக்கெடுப்பு முறையில் வெற்றியாளர்கள் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போட்டியில் முதலிடம் வென்ற வெற்றியாளர்களுக்கு, அஞ்சப்பர் உணவகம் சார்பில் "சின்னக் குயில்" சித்ரா அவர்களோடு சிறப்பு இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சித்திரை விழாவின் முத்தாய்ப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த வாழையிலை விருந்தில் சுமார் 600 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இன்றைய சூழலில், அதுவும் அமெரிக்காவில், ஒரே குடும்பமாய் அமர்ந்து, வாழையிலையில் நம் உணவுகளைப் பரிமாறி, உண்ணும் சுவாரசியம் சிறப்பான நிகழ்வே.

பேரவைத் தலைவர் திரு.கபிலன் அவர்களும், பேரவை துணைத் தலைவர் திரு.சசிகுமார் அவர்களும் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றிகளையும், வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்தனர். பேரவை துணைத் தலைவர் திருமதி சாந்தி தங்கராசு அவர்கள் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்து அனைத்துத் தன்னார்வலர்களுக்கும் பேரவைச் சார்பில் நன்றிகளைத் தெரிவித்தார்.

இறுதியாக விழாவிற்கு மேலும் மெருகேற்றும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செர்சி ரிதம் குழுவினரின் இன்னிசை மழை அனைவரின் உள்ளத்தை நனைத்து, விழா இனிதே நிறைவு பெற்றது.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

Advertisement
Advertisement
Advertisement

நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

புதுடில்லி : டில்லியில் நாளை (மே 24) மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக ...

மே 23,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us