பிரான்சில்தமிழ் புத்தாண்டு-நித்திரை போக்கும் சித்திரை விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்சில்தமிழ் புத்தாண்டு-நித்திரை போக்கும் சித்திரை விழா

ஏப்ரல் 23,2019  IST

Comments

பிரான்சில் அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டு 14 ஏப்ரல் அன்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது அனைவரும் அரோகரா கோஷத்ததுடன் வணங்கினார்கள் பஞ்சபுராணம் பாடியபின் பஞ்சாங்கம் படிக்கப்பபட்டது. பக்தர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்கள். அனைவருக்கும் சிவன் மற்றும் பரிவாரமூர்த்திகளின் ப்ரசாதத்துடன் அன்னதானம் அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து 20 ம் தேதி நித்திரை போக்கும் சித்திரை விழா மிகவும் சிறப்பாகவும் கலகலப்புடனும் நடந்தது. திருமதி பவானி கீர்த்தியாள் பப்பு ஷீலா திருமதி லதா சிவா ஆகியோரின் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட பின் துணை தலைவர் கேசவனின் வரவேற்புறையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து பரதநாட்டியம் மிக சிறப்பாக இருந்தது, பப்பு ஷீலா கவிதை பவானி கீர்த்தியாள் அகவை அறுபது திருமண விளக்கம் உரை இதன் கருத்துக்களை குமாரசாமி மேலும் எளிய முறையில் எடுத்துரைத்தார். 

6 வயது சிறுமியின் ஆயர்பாடி மாளிகையில் என்ற பாடலுக்கு நடனமாடியபோது பார்வையாளர்கள் யாவரும் எழுந்து நின்று ஆரவாரத்துடன் கைதட்டகளை அளித்தார்கள் அரங்கமே அதிர்ந்தது என்றால் மிகையாகாது. முத்துக்குமரன் கள்ள அழகர் வைகையாற்றில் காலபதித்த வரலாற்றை எடுத்து கூறினார் . விழா தோய்விலாமல் நடக்க சுப்ரமணியம் பங்கெற்ற வினாவிடை மற்றும் விகாரி வருடத்தின் விளக்கம் அருமை பலத்தகைதடதல்களுடன் நடத்தினார். முத்துக்குமரன் நன்றியுரை வழங்கினார் அன்னைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது. நித்திரை கெடுக்கும் சித்திரை விழாவை ரசித்வாறு யாவரும் வீடு திரும்பினார்கள். 


- நமது செய்தியாளர் முத்துக்குமரன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)