சிங்கப்பூரில் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இலக்கிய நிகழ்வு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இலக்கிய நிகழ்வு

ஏப்ரல் 23,2019  IST

Comments

சிங்கப்பூர் தமிழ் மொழி விழாவையொட்டி ஒவ்வொரு அமைப்புக்களும் தத்தமக்கு ஏற்ற வகையில் முத்திரைத் திருவிழாக்களை நடத்தி வருகின்றன. சுவை ததும்பும் இவ்விழாக்களில் ஒன்றாகத் தனது 13 ஆவது ஆண்டு நடத்தப்படும் விழாவாகவும் தமிழ் மொழி விழாவின் ஐந்தாவது நிகழ்வாகவும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் “ தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் “ எனும் கருத்தை மையப்படுத்தி உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் கோலாகலமான நிகழ்ச்சியை ஏப்ரல் 19 ஆம் தேதி நடத்தி அசத்தியது. பச்சைச் சட்டையும் பட்டு வேட்டியும் அணிந்து தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வண்ணம் மேடையில் பதாகை ஏந்தி நின்றமை கண்கொள்ளாக் காட்சியாகும்.

பாசிர் ரிஸ் – பொங்கோல் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ஜைனல் பின் சபாதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நாடாளு மன்ற நியமன உறுப்பினர் முஹம்மது இர்ஷாத் மற்றும் வளர் தமிழ் இயக்கத் தலைவர் இரா.ராஜாராம் முன்னிலை வகித்தனர். உமறுப் புலவர் தமிழ் மொழி நிலைய மாணவர்கள் கிருத்திகேஷ் - அருண் – தமிழ் இலக்கியா - ஆன் சாஃப்ரின் – பிரவின் ராஜ் – யுவராஜ் – ஹரி நாராயணன் – ஹரீஸ்வரன் – சுசீந்தர் ஆகியோர் பங்கு பெற்ற முனைவர் ரா.விமலன் ஒருங்கிணைத்து வீ. ராமர் எழுதிய குறு நாடகம் பலத்த வரவேற்பைப் பெற்றது. “ ஒத்திகை “ எனும் இக்குறு நாடகம் அரிய கருத்துக்களை விளக்குவதாக அமைந்தது. உதாரன் அமுதவல்லிக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த செய்தியைத் தெரிவித்தது. ஓமன் நாட்டு உடைந்த பீங்கான் பாத்திரங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்ததை விளக்கியது. சும்ஹீரம் நகரத்துக் கடல் வாணிகப் பயணத்தை எடுத்துக் காட்டியது. மாணவர்களின் திறமை பளிச்சிட்டதைக் கண்டு பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி வாழ்த்தினர்.

முத்தாய்ப்பு நிகழ்வாக ஜமாலியன் விருது அறிவிக்கப்பட்டது. இவ்வாண்டுக்கான ஜமாலியன் விருது கடைய நல்லூர் முஸ்லிம் லீக் தலைவரும் கௌரவ நீதிபதியும் சிறந்த தமிழறிஞருமான நசீர் கனிக்கு பலத்த கரவொலிக்கிடையே வழங்கப்பட்டது. பொற்பதக்கம் – விருதுப் பட்டயம் – மாலை அணிவித்து விருதாளர் சிறப்பிக்கப்பட்டார். ஆயிரமாவது மேடையை சிங்கப்பூரில் கண்டார் விழாவின் சிறப்புரையாளர் தமிழக – வாணியம்பாடி இஸ்லாமியாக் கல்லூரி மேனாள் தமிழ்த் துறைத் தலைவர் தி.மு.அப்துல் காதர். தமது நூறு நிமிட உரையில் “ தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் “ என்ற தலைப்பில் அவர் சிறப்புரையாற்றவில்லை – பார்வையாளர்களைத் தமிழ் சிகரத்திற்கே இட்டுச் சென்று விட்டார். “ ஊசி விற்க வந்த வெள்ளையர்களால் கந்தலாகிப் போன இந்தியாவைக் கண்முன் நிறுத்திய காதர் “ வயிற்றிலே காற்று வடிவத்தில் உருவான மொழி வாய்வழி வெளியேறுகிறது – அதனாலேயே “ டெலிவரி “ என்று நகைச் சுவை ததும்பவும் உரையாற்றத் தவறவில்லை. சைவத்தைப் பறை சாற்றினார் – சத்ரு சம்ஹார கோட்டை கிராமத்தில் பறவைகளின் நலன் கருதிப் பல்லாண்டுகளாக தீபாவளி கொண்டாடுவதில்லை என்ற செய்தியையும் தெரிவித்தார். வேர்கள் கீழேதான் இருக்கும் – தராசு தாழ்ந்து இருப்பதால் “ கனமானது “ என்பதை நயம்பட உரைத்தார்.

நிகழ்வு அமைப்பின் தலைவர் பட்டயக் கணக்காய்வாளர் முனைவர் மு.அ.காதர் தலைமையில் நடைபெற்றது. ஜி.சி.இ “ ஏ “ நிலைத் தேர்வில் உயர் தமிழ் உள்ளிட்ட பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற விக்டோரியா தொடக்க கல்லூரி மாணவர் முஹம்மது மாதிஹ் பாராட்ப்பட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி மாணவி அனுமிதா முரளியின் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது. செயலவை உறுப்பினர் சு.ராஜ்குமார் நிகழ்வினை நெறிப்படுத்தினார். பெருந்திரளான இலக்கிய ஆர்வலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மே 17 ல் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா- 126 வது ஜெயந்தி விழா

மே 17 ல் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா- 126 வது ஜெயந்தி விழா...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)