சிங்கப்பூரில் “ கல்யாண சமையல் சாதம் “ | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் “ கல்யாண சமையல் சாதம் “

ஏப்ரல் 23,2019  IST

Comments

சிங்கப்பூர்த் தமிழ் மொழி விழாவில் இலக்கியச் சுவையும் – இசைச் சுவையும் – பக்திச் சுவையும் மட்டுமல்ல – இவைகளோடு தலை வாழை இலை உணவுச் சுவையும் படைத்தனர் தமிழ் அமைப்பினர். “ லிஷா “ மகளிர் பிரிவு “ கல்யாண சமையல் சாதம் “ என ஒரு அங்கத்தைப் படைத்து தமிழர் பாரம்பரிய விருந்தோம்பல் பண்பைப் பறை சாற்றினர். தலை வாழை இலையைக் குமரி இலை என இலக்கியங்கள் பேசும். இத்தகு தலை வாழை இலையில் கல்யாண சமையல் சாதம் – காய்கனிகளும் பிரமாதம் என்கிற வகையில் நூற்றுக்கு மேற்பட்டோரை அமர வைத்து தமிழர் பாரம்பரிய விருந்து படைத்து அசத்தினர் “ லிஷா “ மகளிர் பிரிவு அமைப்பினர்.

வாழை இலையில் உணவு உண்பது தமிழர் கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுவது மட்டுமல்ல – மருத்துவ குணமும் அதற்கு உண்டு. தமிழர் கலாச்சார அடையாளங்களில் இதுவும் ஒன்று. பிற இனத்தவரும் இதை அறிந்து கொள்ளும் வண்ணம் உணவு பரிமாறும் முறை – உணவு வரிசை – உண்ணும் வரிசை போன்றவற்றையும் எடுத்தியம்பப்பட்டது. வாழையடி வாழையாக வந்த தமிழர் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இளையோரும் பிற இனத்தோரும் அறிந்து கொள்ளும் வண்ணம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ‘ லிஷா “ மகளிர் பிரிவை அனைவரும் பாராட்டி வாழ்த்தினர். உணவுச் சுவையோடு கலாச்சார உரைச்சுவையையும் விருந்தினர் ரசித்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)