இன்பத் தமிழும் இளைய தலைமுறையும் – இந்திய முஸ்லிம் பேரவை நிகழ்வு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இன்பத் தமிழும் இளைய தலைமுறையும் – இந்திய முஸ்லிம் பேரவை நிகழ்வு

ஏப்ரல் 30,2019  IST

Comments

 சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை தமிழ் மொழி விழாவில் இரண்டாவது முறையாக “ இன்பத் தமிழும் இளைய தலைமுறையும் “ என்ற இனிய நிகழ்வினை ஏப்ரல் 21 ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் இளையோரைக் கொண்டே மிகச் சிறப்பாக நடத்தியது. கீர்தனா – பிரத்யுன் – அஷோக்ராஜ் ஆகியோரின் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது. யுக பாரதியின் பாடலுக்கு நெல்லை உஸ்மான் இசையில் சாதிக் பாட்ஷா – சலினா அப்துல் காதர் ஆகியோர் பாடிய தமிழ் மொழி சிறப்புப் பாடல் காணொளியாகத் திரையிடப்பட்டது.


அடுத்த அங்கமாக “ உணவும் உணர்வும் “ என்ற குறு நாடகம் இடம் பெற்றது. ஃபவுஸீல் ஹினாயா நடித்தார். அப்தா முஹம்மது எழுதிப் படைத்தார். “ என்னைக் கவர்ந்த தமிழ் “ என்ற தலைப்பில் ஜைரே கோ இ லே என்ற சீன இளைஞர் தமிழில் பேசியும் பாடியும் அசத்தினார். அகர முதல எழுத்தெல்லாம் என்ற குறட்பாவை இசையோடு பாடி கரவொலி பெற்றார். “ ஓ மனமே...மனமே “ என்ற திரைப் படப் பாடலையும் பாடினார். செயிண்ட் ஆண்ரூஸ் உயர் நிலைப் பள்ளி மாணவர் முஷ்தாக் ஆபித் – “ தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் “ என்ற தலைப்பில் உரையாற்றி வியப்பிலாழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஜீராங் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ரஹாயு மஹ்ஜம் – -சிங்கப்பூருக்கு முதலில் வந்த நாராயணப் பிள்ளையிலிருந்து இன்று வரையுள்ளவர்கள் தமிழ் மொழிக்குச் செய்துள்ள சேவைகளைப் பட்டியலிட்டு உரையாற்றினார். நவாஸீதீன் இஹ்ஸான் தமிழ் மொழி விழாவை வாழ்த்தி எழுதிய பாடலை காதர் முஹைய்யுதீன் பாடிய காணொளி திரையிடப்பட்டது.

இந்திய முஸ்லிம் பேரவை மற்றும் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மு.ஜஹாங்கிர் தமது தலைமை உரையில் நாற்பது வயதுக்குக் கீழ் உள்ளவர்களையே இவ்விழாவில் பங்கேற்க முடிவு செய்ததாகத் தெரிவித்தார். பண்பை வளர்க்கத் தமிழும் பணத்தை வளர்க்க ஆங்கிலமும் சிங்கையில் பயன்படுகிறதென்றும் தமிழ்ச் சொற்கள் எங்கே தவறாக இருந்தாலும் அரசு சரி செய்கிறதென்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் தெரியப்படுத்தினால் உடனே தவறுகள் களையப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார். விழாவில் சிறப்புரை ஆற்றிய தமிழகப் பேச்சாளர் சுமதிஸ்ரீ சங்க இலக்கியங்களிலிருந்து தற்கால இலக்கியம் வரை பற்பல செய்திகளைச் சுட்டிக் காட்டி சொற்பெருக்காற்றினார். முன்னதாக முஹம்மது கவுஸ் வரவேற்புரை ஆற்றினார். ஃபரீஜ் முஹம்மது நிகழ்வினை நெறிப்படுத்தினார். இளையர்களே முன்னின்று நடத்திய இவ்விழா அனைவரையும் கவர்ந்தது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us