சிங்கப்பூரில் திருமுறை இசை விருந்து | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் திருமுறை இசை விருந்து

மே 02,2019  IST

Comments

 

சிங்கப்பூர் அருள்மிகு முனீஸ்வரன் ஆலயம் மற்றும் சிங்கைச் சிவனடியார்கள் குழு ஏற்பாட்டில் காமன்வெல்த் டிரைவ் ஆலயத் திருமண மண்டபத்தில் திருமுறை இன்னிசைக் கச்சேரி வெகு விமரிசையாக நடைபெற்றது. தஞ்சையைச் சேர்ந்தவரும் மயிலைக் கபாலீஸ்வரர் ஆலயத்தில் ஓதுவா மூர்த்தியாகப் பணியாற்றியவருமான பா.சற்குருநாத ஓதுவார் திருமுறைப் பாடல்களை மனமுருகப் பாடினார். கச்சேரி களைகட்டும் வண்ணம் கடலூர் க.யுகராஜன் மிருதங்கம் வாசித்து அசத்தினார். மணிகண்டனின் வயலினும் சித்தார்த் என்கிற சிவமாறனின் கஞ்சிராவும் கூடுதல் சுவையூட்டின். கஜனின் முகர்சிங் கச்சேரிக்கு மகுடம் சூட்டியது. சுருங்கக் கூறின் திருமுறை தெய்விக இசை பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது எனலாம். திரளான பண்ணிசை ஆர்வலர் கலந்து கொண்டனர். ஆலயம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆக்லாந்து தமிழ் ஆசோஸியேஷன்

ஆக்லாந்து தமிழ் ஆசோஸியேஷன்...

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...

Advertisement
Advertisement
Advertisement

கன்னியாகுமரியில் 23 மீனவர்கள் மாயம்

நாகர்கோவில், கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற 23 மீனவர்கள் கரை திரும்பாததால் குடும்பத்தினர் கவலையில் ...

ஜூன் 26,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us