சனாதன பக்த பரிபாலன சங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சனாதன பக்த பரிபாலன சங்கம்

மே 10,2019 

Comments

பாரிஸுக்கு அருகில் 29 க்ரிங்கிய நகரத்தில் 7 ஆண்டுகளுக்கு முன் தியராஜன் மற்றும் 14 நபர்களுடன் சேர்த்து நிறுவிய சனாதன பக்த பரிபாலன சங்கம். இச்சங்கத்திற்கு ஜனார்தனி பரந்தாமன் கௌரவ தலைவராக ஏகமனதாக தேர்தெடுக்கப்பட்டார். இச்சங்கம் ஒரு ஆன்மிக தொட்டிற்க்காக ஏற்படுத்தப்பட்டது, எனவே இதில் கைவல்ய கற்பக விநாயகர் ஆலயமாக அமைக்கப்பட்டது. இவ்வாலயத்தில் முழுமுதற்கடவுள் விநாயகப்பெருமான் ஐம்பொன் திருவுருவச்சிலை தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்டு பிரான்ஸ் நாட்டிற்கு எடுத்துவரப்பட்டது. ஆகம விதிகளின் படி இங்கு (பிரதிஷ்டை) நிறுவிய நன்னாளில் இந்தியர்களும் தமிழர்களும் ஆன்மிகர்களும் திரளாக பங்குகொண்டார்கள்.

அன்று முதல் இங்கு மாதம் தோறும் சங்கடசதுர்த்தி மற்றும் பல திருவிழாக்கள் நம்நாட்டில் நடைபெறுவதுபோல் நடத்தப்படுகிறது. குறிப்பாக விநாயகரின் திருஅவதார (பிறந்தநாள்) நாள், மகாக சிவராத்ரி, புரட்டாசி சனிக்கிழமைகள், தீபாவளி, பொங்கல்,பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் பகதர்கள் கூட்டம் மண்டபமே நிறைந்து காணப்படும். யாவரும் கூட்டுவழிபாட்டில் கலந்துகொண்டு சிவபுராணம், கந்த ஷஷ்டிகவசம், பஞ்சபுராணம், திருமால், அம்மன் பாடல்கள் போன்றவைகளை பாடுவார்கள்.

ஒவ்வொருசனிக்கிழமைமாலைசிறுவர்,சிறுமிகளுக்கு இவைகளை சொல்லித்தந்து கூட்டு பஜனை நடத்துவார்கள். இச்சங்கத்தின் நிகழ்ச்சிகளை காண இந்நகரத் தந்தை மற்றும் அவர்களின் குழுமத்துடன் வந்து கண்டுகளித்து ஆனந்தப்பட்டு இந்நகரத்தில் நமது நாட்டின் சிற்பக்கலைகளுடன் கூடிய கோபுரமமைத்து ஒரு பெரிய கோயிலை கட்டுவதற்கு 2500 சதுர மீட்டர் நிலத்தை தானமாக கொடுத்துள்ளார்கள். விரைவில் இந்த இடத்தில் பிரமாண்டமான இந்து கோயில் அமையவுள்ளது. இதற்கான நிதி சேர்க்க ஆரம்பித்துளார்கள்.

- நமது செய்தியாளர் முத்துக்குமரன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நைஜீரியாவில் அமைதியான நவராத்திரி

நைஜீரியாவில் அமைதியான நவராத்திரி...

சிங்கப்பூரில் விஜயதசமி விழா கோலாகலம்

சிங்கப்பூரில் விஜயதசமி விழா கோலாகலம்...

ஆக்லாந்தில் நவராத்திரி விழா

ஆக்லாந்தில் நவராத்திரி விழா...

அஜ்மானில் சமூக ஆர்வலருக்கு பாராட்டு

அஜ்மானில் சமூக ஆர்வலருக்கு பாராட்டு ...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us