இசைக்கும் இதயத்திற்கும் இதமான தொடர்பு எப்போதும் உண்டு.அப்படி பட்ட இசையினை இரவு-பகல் பாராமல் நமக்கு 365 நாட்களும் வழங்கிக்கொண்டிருப்பது விதவிதமான ரேடியோ எஃப் எம் கள் தான். அந்த வகையில் குக்கூ ரேடியோ உலகின் அனைத்து தமிழர்களின் இசைப்பாலமாய் இருந்து, பலவகை ரேடியோக்களை நமக்கு அளித்துள்ளது.
இந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி, குக்கூ ரேடியோவின் மூலம் மதுரை மாநகரில், டல்லாஸை சேர்ந்த உரிமையாளர் சரவணன் பரமசாமியின் தாயார் திருமதி.காசம்மாள் தலைமையில் 'மதுரமல்லி எஃப் எம்' வெளியிடப்பட்டது.
மதுரைக்கு மட்டுமல்ல,உலகில் எங்கிருந்தாலும் தமிழ் இசை ரசிகர்கள் இசைமழையில் நனையச் செய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி, டெக்சாஸ்-சான் ஆண்டோனியோவின் தமிழ்ச் சங்கத்தின் சித்திரை திருவிழாவில் மிகச் சிறப்பான முறையில் 'எஸ் ஏ தமிழ் எஃப் எஃப் ' -சான் ஆண்டோனியோ தமிழ் எஃப் எம்- இது சந்தோஷமான எஃப் எம்' என்ற அடைமொழியுடன் வெளியிடப்பட்டது.
ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்-இது நேற்றைய பழமொழி, 'ஒரே கல்லில் நான்கு மாங்காய்' இது குக்கூ ரேடியோவின் இன்றைய புதுமொழி ! இந்த ஒரே ஒரு ஆப் மட்டுமே நீங்கள் டவுன்லோட் செய்துகொண்டால் போதும், நான்கு ரேடியோக்களை நீங்கள் கேட்டு மகிழலாம்.
இசையை பெருக்கி,பகையைக் குறைக்கும் பேருதவியைச் செய்துகொண்டிருக்கும் எஃப் எம் கள் வாழ்க !
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
பேங்காக் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய விநாயகர் சதுர்த்தி விழா...
அஜ்மான் இந்திய சங்கத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.