தாமன் ஜீரோங் தமிழ் மன்ற இலக்கிய விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தாமன் ஜீரோங் தமிழ் மன்ற இலக்கிய விழா

மே 13,2019  IST

Comments

அன்னையர் தினமா – மழலையர் விழாவா – முத்தமிழ் சங்கமமா ? என வியக்குமளவுக்கு தாமன் ஜீரோங் இந்தியர் நற்பணிச் செயற்குழு ஆதரவுடன் தாமன் ஜீரோங் தமிழ் மன்றம் மே 11 ஆம் தேதி மன்ற அரங்கில் இலக்கிய விழாவினை நடத்தி அசத்தியது. மழலையர் பட்டாளம் – அன்னையர் திருக்கூட்டம் என அரங்கம் நிறைந்த விழாவில் பத்து வயதுக்கும் குறைவான மழலையர்களைக் கொண்டு கதை கூறும் அங்கம் – தமிழோடு விளையாடு – விடுகதை – பாரம்பரிய விளையாட்டு – பாட்டு பரதமென கோலாகலமாக நடைபெற்ற இப்பல்சுவை விழா தமிழ் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது.

சீதாராம் நாட்டிய அகடெமி இளம் தாரகைகள் “ அற்றைத் திங்கள் “ என்ற இலக்கியப் பாடலுக்கு பரதமாடி நிகழ்வைத் தொடக்கி வைத்தனர். காகிதத்திற்காக மரங்களை அழிப்பதால் எவ்வளவு இழப்பீடு ஏற்படுகிறதெனக் குறு நாடகத்தில் ரத்னாவும் ஓவியாவும் நடித்துக் காட்டினர். மறுபயனீடு செய்வதன் அவசியம் பற்றியும் நாடகம் விளக்கியது. தண்ணீரை விணாக்குவதைத் தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வுச் செய்தியையும் தெரிவிக்கப் பிள்ளைகள் தவறவில்லை.

தமிழோடு விளையாடு என்ற அங்கத்தில் பல சொற்களைப் பிள்ளைகள் ஆர்வத்தோடு போட்டி போட்டுக் கூறியது வியப்பிலாழ்த்தியது. தமீம் அன்சாரி இந்நிகழ்வினை நடத்தினார். திங்கள்தோறும் அறிமுகப்படுத்தும் “ இலக்கிய அறிமுகம் “ நிகழ்ச்சியில் அன்னை தெராசா பற்றிய நன்னெறி விளக்கத்தைப் புலவர் தீ.விஜயசுதா எடுத்துரைத்தார். சிறுவர்களின் பல்சுவை நிகழ்வில் ஹரிணி - ஓவியா விடுகதையும் – ஆதிரையின் சிலப்பதிகார உரையும் - ஜோஸிகாவின் ஔவையார் பற்றிய உரையும் – முகிலனின் திருக்குறள் கதையும் – அவிக்தாவின் பாட்டும் – மித்ரா – சுஷ்மிதா “ ஆகியோரின் திரைப் படப் பாட்டும் –யூகியின் கதையும் இடம் பெற்றன.

உமா சங்கர் – முகேஷ் அரவிந்த் திருக்குறள் நாடகம் நடத்தினர். ரோகித் கட்டபொம்மனாகத் தோன்றி வசனம் பேசி கரவொலி பெற்றார். மீரா ஆத்திசூடி பற்றியும் சத்தியன் நல்வழி பற்றியும் பேசினர். ஸ்மிருதி பாவேந்தர் பாரதிதாசனை நினைவுபடுத்தினார். பாரதியும் வந்து போனார். நித்யஸ்ரீ நல்ல பொழுது போக்கு பற்றி எடுத்துரைத்தார். செல்வி யாழ் பாரதியும் ஹரிநேத்ராவும் நிகழ்வினைச் சுவைபட நெறிப்படுத்தினர். ஆர்வத்தோடும் மேடை அச்சமின்றியும் பிள்ளைகளின் நிகழ்வினை ஏற்பாடு செய்த புலவர் தீ.விஜயசுதா தீனதயாளன் பாராட்டுக்குரியவர்.

நிகழ்வில் பெற்றோர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மூத்த பத்திரிகையாளர் வெ.புருஷோத்தமன் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார். அவர் தமதுரையில் பதின்மூன்றாவது தமிழ் மொழி விழா நிறைவுற்ற வேளையில் நடைபெறுகின்ற இவ்விழா “ எதிர்கால சந்ததியினருக்குத் தமிழ் மொழியைக் கொண்டு செல்லுவதே நோக்கம் “ என்ற அரசின் கொள்கையைச் செயல்படுத்துவதாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார். முன்னதாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் புலவர் விஜயசுதா வரவேற்புரையும் – நிறைவாக நன்றியுரையும் நவில விழா அனிதே நிறைவு பெற்றது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)