நைஜீரியா தமிழ் சங்கத்தின் சங்கமம்- 2019 | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நைஜீரியா தமிழ் சங்கத்தின் சங்கமம்- 2019

மே 14,2019  IST

Comments

 லேகோஸ், நைஜீரியா: மே 12, ஞாயிறு அன்று லேகோஸில் தமிழ் சங்கம் நடந்திய சங்கமம் நிகழ்ச்சி களை கட்டியது.

இயல், இசை, நாடகம் என்று எங்கும் தமிழ் எதிலும் தமிழ் போற்றப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் ஒன்று கூடி குதூகலமாக மகிழ டிவி பிரபலங்கள் 'கலக்கப்போவது யாரு' அசார் மற்றும் வடிவேல் பாலாஜி அவர்களையும் மற்றும்  அரவிந்த் அவர்களையும் அழைத்து வந்தது நைஜீரியா தமிழ் சங்கம்.

விருந்தினர்கள் மக்களை முற்றிலும் அவர்கள் வசப்படுத்தினர் என்றே கூற வேண்டும். மிமிக்கிரி, கலக்கல் காமெடி என்று சிரித்து மகிழ்ந்தது 400க்கும் மேல் தமிழ் மக்கள் அமர்ந்திருந்த அரங்கம்.

லேகோஸ் இந்திய தூதரகத்திலிருந்து வந்திருந்த திரு சுப்பு ரமேக்ஷும் அவர் மனைவியும் தமிழர்கள் என்ற அடையாளத்துடன் விழாவை ரசித்து மகிழ்ந்து சங்கமம் 2019ஐ மேலும் சிறப்பித்தார்கள்.

இசை, நடனம், நாடகம் என லேகோஸ் தமிழ் குழந்தைகளும், பெரியவர்களும் அசத்தினர். சுமார் 11 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சி, மதிய உணவு விருந்திற்கு பின்னும் தொடர்ந்து மாலை 7 மணி வரை நீடித்தது.

கடந்த இரு வாரமாக நைஜீரியா தமிழ் சங்கம் நடத்திய சதுரங்கம், பூப்பந்து, கேரம் மற்றும் ஆடவர்கள்-மகளிர்-சிறுவர்கள் சேர்த்து அணியாகி அவ்வாறு 6 அணியாக பாக்ஸ் கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தி அதில் வெற்றியாளர்களுக்கு பரிசும் சங்கமம் மேடையில் வழங்கப்பட்டது. தமிழை மையமாக வைத்து 'தமிழோடு விளையாடு' மற்றும் தமிழோசை பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும் நடைபெற்று பரிசுகளும் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டை விட்டு தொலைவில் இருந்தாலும் ஊரில் குடும்ப விஷேசத்தில் கலந்து கொண்டது போன்ற மனநிறைவுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.

- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்


Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

Advertisement
Advertisement
Advertisement

'டான்செட்' தேர்வு : மே 31 வரை அவகாசம்

சென்னை : தமிழ்நாடு அரசு மற்றும் அண்ணா பல்கலைகழகம் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் 'டான் செட்' நுழைவுத்தேர்வுக்கான கால அவகாசம் வரும் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ...

மே 26,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us