லேகோஸில் ஸ்வரயாத்ரா இசைப்போட்டி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

லேகோஸில் ஸ்வரயாத்ரா இசைப்போட்டி

மே 15,2019  IST

Comments

லேகோஸ், நைஜீரியா: வெய்யில் காலத்தின் தொடக்கமான ஏப்ரல் மாதம் லேகோஸ் நகரில் இசைக்காற்றுடன இதமாகவும் அதே நேரம் இங்குள்ள குழந்தைகளின் பிரம்மாண்ட திறமையும் ஒரு சேர வெப்பத்தை தணிக்கவல்லதாய் அமைந்திருந்தது.

ஸ்வரயாத்ரா ஆர்டிஸ்ட்ஸ் அஸோஸியேஷன் இசையால் இணையப்பட்ட இசை கலைஞர்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த ஓர் இசைக்குழு. தபலா, ஹார்மோனியம், கீபோர்ட், பேட், ட்ரம்ஸ் மற்றும் பாடகர்கள் என அனைத்து கலைஞர்கள் கொண்ட இசைக்குழு. இவர்கள் என் ஜி ஓ வாக பதிவு செய்து இங்குள்ளவர்களுக்கு உதவி செய்தும் வருகிறார்கள்.

சென்ற ஆண்டு முதல்முறையாக குழந்தைகளுக்கான சூப்பர் சிங்கர் போட்டி "ஸ்வரயாத்ரா லிட்டில் சாம்ப்ஸ்" நடத்தப்பட்டது.

இந்தாண்டும் குழந்தைகள் அவர்கள் வயதிர்கேற்றார் போல் பாட்டு போட்டி மற்றும் இசை வாத்தியம் வாசிக்கும் போட்டி என பிரிக்கப்பட்டு இரண்டாவது முறையாக "ஸ்வரயாத்ரா சீசன் 2 - லிட்டில் சாம்ப்ஸ்" கடந்த ஏப்ரல் 7ம் தேதி துவங்கியது.

அவர்களின் குரல் வளம், ஸ்ருதி, லயம், தாளம் என்று மூன்று சுற்றுகளில் குழந்தைகள் தங்களுக்கிடையில் போட்டி போட்டுக்கொண்டார்கள்.

இறுதிச்சுற்று ஏப்ரல் 28ம் தேதி ஐ.எல்.எஸ் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக ரொக்கப்பணம், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

சுருலேரே, லேகோஸில் உள்ள அரசு பள்ளிக்கு புதிய கழிவரைகளை கட்டி கொடுத்தும், சில ஏழை பள்ளி மாணவர்களுக்கு தங்கள் படிப்பு தொடர ரொக்கத்தொகை அளித்ததையும் தலைவர் பல்லவி ஷாங்கே பகிர்ந்தார்.

- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 26ல் சிகாகோ ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திரில் இந்துஸ்தானி பக்தி பாடல்கள்

அக்., 26ல் சிகாகோ ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திரில் இந்துஸ்தானி பக்தி ப...

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் நிகழ்வுகள்

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் ...

அக்., 19ல் தாய் தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டு கலாச்சார நிகழ்வு

அக்., 19ல் தாய் தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டு கலாச்சார நிகழ்வு...

நவ., 4- 5ல் ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்

நவ., 4- 5ல் ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்...

Advertisement
Advertisement
Advertisement

லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது

சென்னையில் வில்லிவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருக்கும் தமிழழகன், லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வழக்கு ...

அக்டோபர் 23,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)