சிங்கப்பூரில் கதைக்களம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் கதைக்களம்

மே 16,2019  IST

Comments

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் பெக் கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவோடு இணைந்து நடத்தும் கதைக் களம் மே மாத நிகழ்ச்சி கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமையில் மன்ற அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. நந்திதா – ஜெயகுமார் மற்றும் உமாசங்கர் ஆகியோர் கதை சொல்லி நடித்துக் காட்டி அசத்தினர். பொதுப் பிரிவுக்கான கதை ஒன்றினை மோனாலிசாவும் – கதை விமர்சனம் ஒன்றை பானுமதியும் வாசித்தனர். மாணவர் பிரிவின் சிறுகதையை செல்வன் சரவணன் வாசித்தார்.

சிங்கை எழுத்தாளர் அறிமுகம் அங்கத்தில் மூத்த எழுத்தாளர் பொன்.சுந்தரராசு பற்றி மலையரசி வழிநடத்திட புதிய கதைக்கள எழுத்தாளர் வானதி எடுத்துரைத்தார். தமிழக எழுத்தாளர் சு.வேணுகோபால் “ கதைகளில் கவிதைகள் “ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கமலா தேவி அரவிந்தன் முத்தமிழ் விழா கதைப் போட்டியில் பரிசு பெற்ற கதைகளைப் பற்றி உரையாற்றினார். செயலவை உறுப்பினர் கவிஞர் கோ.இளங்கோவனின் வாழ்த்துப் பா அனைவராலும் பாராட்டப்பட்டது.

இம்மாத சிறுகதைப் போட்டியில் இந்துமதி முதற் பரிசும் சியாம் குமார் இரண்டாவது பரிசும் மணிமாலா மூன்றாவது பரிசும் பெற்றனர். சிறந்த விமர்சனத்திற்கான முதற் பரிசு விஜயலட்சுமிக்கும் இரண்டாவது பரிசு மணிமாலாவுக்கும் அளிக்கப்பட்டது. முகநூலில் சிறுகதைகளுக்கான கருத்தைப் பதிவு செய்த ராமன் – கீழை அ.கதிர்வேலு புத்தகப் பரிசு பெற்றார். துணைச் செயலாளர் கிருத்திகா நிகழ்வினை நெறிப்படுத்தினார்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us