அல்-அய்ன் இந்திய சமூக நல மையம் ஏற்பாட்டில் திருக்குர்ஆன் ஓதும் போட்டி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அல்-அய்ன் இந்திய சமூக நல மையம் ஏற்பாட்டில் திருக்குர்ஆன் ஓதும் போட்டி

மே 19,2019  IST

Comments

அல்-அய்ன் இந்திய சமூக நல மையம் ஏற்பாடு செய்திருந்த திருக்குர்ஆன் ஓதும் போட்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.


அல்-அய்ன் இந்திய சமூக நல மையம் ஏற்பாடு செய்துள்ள திருக்குர்ஆன் ஓதும் போட்டி துவக்கி வைப்பதற்காக அல் அய்ன் சென்ற


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் Mஃஅ அவர்களளை அல் அய்ன் இந்திய சமூக நலத் தலைவர் முபாரக், பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.


நிகழ்ச்சியை துவக்கி வைத்துப் பேசிய பொதுச் செயலாளர் தனது உரையில் இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தந்த என்னை நேரடியாக இங்கு அல் அய்ன் இந்திய சமூக நல மையத்தின் சார்பில் நடைபெறும் புனித திருக்குர்ஆன் ஓதும் போட்டியை துவக்கி வைக்க அழைத்தமைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதை நான் ஒரு பாக்கியமாகவே கருதுகின்றேன்.


1400-வருடங்களுக்கு முன்பு நபிகள் நாயகத்தின் மூலமாக இறைவனால் உலக மாந்தர்களுக்கு அருளப்பட்ட அல்குர்ஆன் எல்லா காலத்திற்கும் அனைத்து மக்களுக்குமான வழிகாட்டும் திருமறையாக இருக்கின்றது.


அருப்பட்டு 1400-வருடங்களுக்கு மேலாகியும் திருக்குர்ஆனின் ஒரு சிறு திருத்தம் கூட செய்ய முடியாமல் திருமறையை மனனம் செய்த ஹாபிழ்களின் இதயங்கள் மூலமும் இறைவன் பாதுகாத்து வருகின்றான்.


திருக்குர்ஆனை மனனம் செய்யும் ஹாபிழ்களின் இதயங்கள் ஒளிவுப் பெற்று வாழ்க்கையில் ஏற்றம் பெறுகின்றனர்.


ஹாபிழ்கள் பாக்கியசாலிகள்,திருக்குர்ஆனை மனனம் செய்திருப்பவர்கள் உலகக் கல்வியிலும் சாதனை படைப்பவர்களாக விளங்கி வருகின்றனர்.


என் உடன் பிறந்த சகோதரர் உஸ்மான் பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர். ஆனால் இன்று ஹாபிழாகவும் பி.ஏ., பட்டம் பயின்றவராகவும் விளங்குகின்றார்.


அதே போன்று எனது குடும்பத்தில் சிறிய தாயாரின் மக்களில் ஹாபிழ்களாக ஏற்றம் பெற்றவர்கள் பொறியல்,ஆடிட்டர் பட்டம் பெற்றிருக்கின்றனர்.


இது போன்று பல்லாயிரம் ஹாபிழ்கள் பட்டம் பயின்றவர்களை நான் பிறந்த காயல்பட்டிணத்தில் பார்க்கலாம்.


நம் சிறு குழந்தைகளை திருக்குர்ஆன் ஒப்புவிக்க நாம் இங்கே உற்சாகப்படுத்துகின்றோம். சிறு பிராயத்திலேயே இப்படி உற்சாகப்படுத்துவதின் மூலம் குழந்தைகளுக்கு திருக்குர்ஆனுடன் நெருக்கம் ஏற்ப்படும்.


தொடர்ந்து நாளடைவில் அதன் அர்த்தத்தை விளங்கும் பொழுது வாழ்க்கையில் அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு விடையளிக்ககூடியதாக மனதிற்கு ஆறுதல் அளிக்க கூடியதாக திருக்குர்ஆனோடு நாம் பேசும் உணர்வை பெறமுடியும்.


வாழ்க்கைக்கு வழிகாட்டும் அருள்மறை திருக்குர்ஆன் ஒப்புவிக்கும் இந்த நல்ல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் என தெரிவித்தார்.


முன்னதாக இந்திய சமூக நல மையத்தில் உள்ள நூலகத்தை பார்வையிட்டு,பார்வையாளர் குறிப்பேட்டில் கையெழுத்திட்டார்.


நிகழ்ச்சியில் பேரவை பொதுச் செயலாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான்,பொருளாளர் மற்றும் நிர்வாகச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி,துணைப் பொதுச் செயலாலர மற்றும் துபாய் மண்டலச் செயலாளர் எம்.எஸ்.ஏ.பரக்கத் அலி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


கூட்டம் முடிந்து அல்- அய்ன் மண்டல அமீரக காயிதே மில்லத் பேரவை செயலாளர் எம்.எஸ்.ஏ. தைய்யுப் அலி, அமைப்புச் செயலாளர் மெளலவி ஏ.அமீனுல் ஹுஸைன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த ஸஹர் விருந்தில் பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் அவர்களோடு பேரவை நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

--- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us