மனதை கொள்ளை கொண்ட சஷாங்க் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மனதை கொள்ளை கொண்ட சஷாங்க்

மே 19,2019  IST

Comments (1)

 

நியூசிலாந்து கர்நாடிக் சங்கம், மறைந்த பேராசிரியர் வாமணமூர்த்தி அவர்களின் நினைவையொட்டி ஆக்லாந்தில் உள்ள ப்க்ளிங் சென்டரில் திரு சஷாங்க் சுப்ரமணியம் அவர்களின் புல்லாங்குழல் இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவருடன் டாக்டர் அசோக் மலூர் அவர்கள் வயலினும் திரு சுரேஷ் ராமச்சந்திரன் அவர்கள் மிருதங்கமும் வாசித்து கச்சேரியை சிறப்புற செய்தார்கள். முதலில் திரு ரவி நாகராஜன் வரவேற்புரை கூறினார். .

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நளினகாந்தி ராகத்தில் தியாகராஜரின் 'மனவியாகிளிஞ்சர' என்ற க்ருதியை மிக அழகாக வாசித்து தொடர்ந்து ஆந்தோளிகா ராகத்தில் 'ராகசுதாரஸ என்று மிக இனிமையாக வாசித்தார். தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்தை கேட்டறிந்து மறுபடியும் இன்னொரு தியாகராஜரின் பாடலான 'துர்மார்க்கச்சரா' என்ற ரஞ்சனி ராக கிருதி மிகச்சிறப்பாக வாசித்தார்.,

பின்னர் ராகம் தானம் பல்லவியை ஆபேரி ராகத்தில் நகுமோமு என்ற கீர்த்தனையை தனக்கே உரிய ஸ்வரப்ரஸ்தாரங்களுடன் நிறைய நிரவல்களுடன் சிறப்பான முறையில் வாசித்தார். அதற்கு தனி ஆவர்த்தனம் மிகச்சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து அன்னமாச்சார்யா கீர்த்தனையான பெஹாக் ராகத்தில் நாராயணதே நமோ நமோ என்ற பாடலை வாசித்து பின் புரந்தரதாஸர் இயற்றிய 'பாரோ கிருஷ்ணையா' என்ற கீர்த்தனையை மாண்டு ராகத்தில் தொடக்கி பிலஹரி, மிஸ்ரபிலு, ஜோன்புரி ராகங்களில் ராகமாலிகையாக வாசித்தார். பின்னர் கானடா ராகத்தில் அலைபாயுதே கண்ணா என்ற பாபநாசம் சிவனின் பாடலை இசைத்து தொடர்ந்து கமாஸ் ராகத்தில் வைஷ்ணவோ ஜனதோ பாடலை மிக இனிமையாக வாசித்து மங்களம் இசைத்து முடித்தார். திரு சஷாங்க் தேர்ந்தெடுத்த கீர்த்தனைகள் யாவையும் அவையோரின் பாராட்டைபெற்றது.

கச்சேரி ஆரம்பம் முதல் தொடர்ந்து விறுவிறுப்பாக இசைத்து ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் கலையை இவரிடம் தெரிந்து கொள்ள வேண்டும். அசோக் மலூர் வயலின் சுரேஷ் ராமச்சந்திரா மிருதங்கம் அவருக்கு பக்கபலமாக இருந்து இசைத்ததை ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள்.

நிறைவாக திருமதி மாலா நடராஜ் அவர்களும் திருமதி பிரியா விஜய் அவர்களும் இசை கலைஞர்களை பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கி நன்றியுரை கூறினார்கள். கர்நாடக ரசிகர்களுக்கு சஷாங்கின் புல்லாங்குழல் கச்சேரி மிகச்சிறந்த விருந்தாக அமைந்தது என்றால் மிகையாகாது.


- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆக்லாந்து தமிழ் ஆசோஸியேஷன்

ஆக்லாந்து தமிழ் ஆசோஸியேஷன்...

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Milirvan - AKL,New Zealand
22-மே-201902:14:55 IST Report Abuse
Milirvan அருமை.. கச்சேரியின் அனைத்து அம்சங்களையும் சிறப்பாக, நுணுக்கமாக, அதே நேரத்தில் தெளிவான பிசிறற்ற நடையில் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us