துபாயில் மனிதநேய கலாச்சார பேரவை சார்பில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் மனிதநேய கலாச்சார பேரவை சார்பில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி

மே 21,2019  IST

Comments

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் தொண்டாற்றி வரும் மஜக சார்பு வெளிநாட்டு அமைப்பான ,மனிதநேய கலாச்சார பேரவை சார்பில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி துபையில் எழுச்சியோடு நடைப்பெற்றது.

இதில் இந்தியாவிலிருந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், இணைப் பொதுச் செயலாளர் JS ரிபாயி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க வந்திருந்தனர்.

பல்வேறு சமூக மக்களும் வந்திருந்ததால்,கூட்டம் பன்மைத் தன்மையோடு சிறப்புற்று இருந்தது.

ஐக்கிய அரபு அமீரக அரசு இவ்வாண்டு 2019 ஐ சகிப்புத்தன்மை ஆண்டாக அறிவித்துள்ள நிலையில், அதற்கேற்ப நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

"சகிப்புத் தன்மையை வலியுறுத்தும் இஃப்தார் நல்லிணக்க நிகழ்ச்சி " என பெயரிடப்பட்டு , அரங்க நுழைவாயிலுக்கு அமீரக சிற்பி மேதகு ஷேக் சைய்யத் பின் நஹ்யான் அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அவர்தான் அமீரகத்தை பன்மை கலாச்சார- சமூக நல்லிணக்க புரிதல்களோடு உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது போல் ,மேடைக்கு அன்னை தெரஸா அவர்களின் பெயரும், அரங்கத்திற்கு காந்தியடிகளின் பெயரும் சூட்டப்பட்டு மக்களை சிந்திக்க வைத்திடும் வகையில் நிகழ்வு வடிவமைக்கப்பட்டது பலராலும் பாராட்டப்பட்டது.

நிகழ்வில், அமீரகத்தில் மக்கள் சேவையாற்றி வரும் அஜ்மானில் இருக்கும் ஆரிஃபா குழும தலைவர் M.சுல்தானுல் ஆரிபின், அபுதாபியில் இருக்கும் மர்ஹபா அமைப்பின் தலைவர் M.சுஹைபுதீன், அல் அய்னில் இருக்கும் இந்திய சமூக மையம் மற்றும் தமிழ் குடும்பம் ஆகிய அமைப்புகளின் தலைவர் S. முபாரக் ஆகியோருக்கு மனிதநேய கலாச்சாரப் பேரவையின் சார்பில் சமூக சேவை விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கூட்டத்தில் மனிதநேய கலை இலக்கிய பேரவை சார்பில், பாடகர் ஹாஜா அவர்கள் நாகூர் அனீபா பாடிய பிரபல பாடலான "ஆதி இருள் கனிந்திழங்கி..." என்ற பாடலை பாடி கூட்டத்தை நெகிழ வைத்தார்.

கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அமீரக மண்டல MKP செயலர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் நமது தாயகப் பணிகள் குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார்.

மஜக இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி அவர்கள், கமல்ஹாஸனின் காந்தி படுகொலை தொடர்பான கருத்தை முன்வைத்து. சமகால அரசியலில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதையும், அதன் அபாயத்தையும் சுட்டிக்காட்டி விமர்சித்தார். இஸ்லாம் சகிப்புத்தன்மை குறித்து எடுத்துரைக்கும் கருத்துகளையும் அழகாக வரிசைப்படுத்தி பேசினார்.

அவரது உரைக்கு பிறகு நியுசிலாந்து மற்றும் இலங்கையில் பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் அனைவரும் எழுந்து நின்று மெளனமாக மரியாதை செய்தனர். கூட்டத்தினர் உணர்வுப்பூர்வமாக எழுந்து நின்று அமைதி காத்து நின்றனர்.

அத்துடன் நோன்பு துறப்பு மற்றும் தொழுகை இடை வேளை விடப்பட்டது.

அப்போது அந்த பெரிய அரங்கம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.

பிறகு,இரண்டாம் அமர்வில் பேசிய மஜக பொதுச் செயலளார் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அமீரக அரசு , இவ்வாண்டை சகிப்புத்தன்மை ஆண்டாக அறிவித்திருப்பதற்கு , அமீரக ஆட்சியாளர்களுக்கு தன் பாராட்டுகளை தெரிவித்தார்.

அமீரகத்தின் துபையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக, 4 பெரும் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் மனிதநேய கலாச்சாரப் பேரவையின் நல்லிணக்கப் பணிகளை பாராட்டினார்.

வன்முறை , பயங்கரவாதம் ,மத வெறி ஆகியவற்றுக்கு எதிராக போராட வேண்டும் என்றும், சகிப்புத்தன்மையே வாழ்வின் அழகு என்றும் கூறினார்.

அதன் பிறகு துண்டு சீட்டில் வந்த பரபரப்பான அரசியல் கேள்விகளுக்கு விறுவிறுப்பாக, பலத்த கைத்தட்டல்களுக்கிடையே பதில்களை கூறினார்.

கூட்டம் முடிந்ததும் , 1 மணி நேரத்திற்கும் மேலாக மக்களுடன் அவரும், இணைப் பொதுச் செயலாளர் JSR அவர்களும் அளவளாவினர்.

சென்ற ஆண்டு நடைப்பெற்ற MKP இஃப்தாரை விட , இவ்வாண்டு கூட்டம் அதிகம் என பலரும் கூறினர்.இன்று துபை, ஷார்ஜா என எங்கும் ஏழெட்டு இஃப்தார் நிகழ்ச்சிகள் நடைப்பெற்ற நிலையில் பெரும் திரளான மக்கள் இங்கு குழுமியது மனிதநேய சொந்தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நிகழ்ச்சியை அமீரக துணைச் செயலர் A. அசாலி அஹ்மது இனிதே தொகுத்து வழங்கினார். நீதி போதனையை H. அப்துல் அஹத் அவர்கள் ஆற்றினார்.

அமீரக பொருளாளர் H.அபுல் ஹஸன் அவர்கள் வரவேற்புரையாற்ற,

துபை மாநகர செயலர் ரஹ்மத்துல்லா அவர்கள் நன்றி கூறினார்.

வருகை தந்திருந்த திமுக, அமமுக, காங்கிரஸ், விசிக, நாம் தமிழர், மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், குத்தாலம் அஸ்ரப் , தமிழ் குடும்பம் சலீம் போன்ற சமூக ஆர்வலர்களுக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் அமீரக துணைச் செயலர் பூதமங்கலம் S.ஜாஹீர் உசேன் , கொள்கை பரப்பு செயலர் Y.அப்துல் ரெஜாக், தகவல் தொழில்நுட்ப அணி செயலர் Y.M.ஜியாவுல் ஹக்,, IKP செயலர் J.ஷேக் தாவூது,,அமீரக நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எலந்தங்குடி M.முகம்மது யூசுப்,கட்டிமேடு A.ஜாகிர் உசேன், அல் அய்ன் மண்டல செயலர் S.முகம்மது இம்ரான், பொருளாளர் M.அப்துல் நாசர், துபை மாநகரப் பொருளாளர் V. சஃபீக் ரஹ்மான், துபை மாநகர தகவல் தொழில் நுட்ப அணி செயலர் பொதக்குடி K.M.முகம்மது அஸாருதீன்,அபுதாபி, அஜ் மான், ஷார்ஜா நிர்வாகிகள் என பலரும் முன்னிலை வகித்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட துபை MKP சொந்தங்கள் சிறப்பாக பணிகளை ஒருங்கிணைத்தது பாராட்டப்பட்டது.

- நமது செய்தியாளர் காஹிலாAdvertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)