தென் கலிபோர்னியா தமிழ் பள்ளியின் 8ம் ஆண்டுவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தென் கலிபோர்னியா தமிழ் பள்ளியின் 8ம் ஆண்டுவிழா

மே 22,2019  IST

Comments

  

தென் கலிபோர்னியா தமிழ் பள்ளியின் 8ம் ஆண்டு விழாவிற்கு, ஒரு புதிய துவக்கமாக, பெற்றோர்கள் அவர்களது நண்பர்களையும், உறவினர்களையும் கலந்து கொள்ள அழைக்கும் போதே, அமைப்பாளர்களுக்கு இவ்விழாவின் பிரம்மாண்டம் தெரிய துவங்கியது. இவ்விழாவின் மனம் திறந்த அழைப்பு, தென் கலிபோர்னியா மாகாணத்தில் தமிழர்கள் மத்தியில் ஒரு இன்ப அதிர்ச்சியை உருவாக்கியது வரலாறு.

தோராயமாக 80க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், 60 ஆசிரியர்கள், 300 மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் என 800 பேரால் நிறைந்திருந்தது விழா அரங்கம். நமது தன்னார்வலர்களின், ஆசிரியர்களின் கைவண்ணத்தில் மற்றுமொரு குதூகலமான விழா. ஆறு மணித்தியாலங்கள் நீண்ட இவ்விழாவில் ஒவ்வொரு மணித்துளியும் விழாவின் உச்சக்கட்டமே! அவையில் இருந்த அத்துணை குழந்தைகளும் மேடை ஏறி தமிழ்தாய் வாழ்த்திசைத்து, குத்துவிளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்ட விழா, குழந்தைகளின் பரிசளிப்பு தொடங்கியவுடன் வேகமெடுத்தது. சென்ற வருடம் போலவே இவ்வருடமும், பல்வேறுபட்ட போட்டிகளில் 215 பரிசுகளை வென்று ஆச்சரியபடுத்தினார்கள் நம் மாணவர்கள்.

சென்ற வருடம் 100 திருக்குறள்கள் சொல்லி திருக்குறள் செல்வன் மற்றும் திருக்குறள் செல்வி விருதுகளை குவித்த கௌதம் அருண்குமார் - அவந்திகா க. சந்திரன் இருவரும் இவ்வருடம் முறையே 500 மற்றும் 310 திருக்குறள்களை சொல்லி அசத்தியது அமைப்பாளர்களாக, தமிழ் ஆர்வலர்களாக, தன்னார்வலர்களாக, ஆசிரியர்களாக மற்றும் பெற்றோர்களாக எம் அனைவரையும் பெருமை பட வைத்த தருணம்.
இத்தகு பெற்றோர்களால், சிறார்களால் இவ்வருடம் திருக்குறள் போட்டியில் பங்கு பெற்றவர்கள் எண்ணிக்கை பன் மடங்கு. அதில் ஒரு சிறுவன் ஆரவ், தன் நான்கு வயதில் 20 திருக்குறள்களை சொல்லியது அந்தளவில் ஒரு சாதனை.
இத்தகு சிறார்களை அடையாளம் கண்டதில் தமிழ் சங்கம் உவகை கொள்ளும் தருணமிது!
இவ்வருட விழா மேடையில் செய்யப்பட்ட ஒவ்வொரு அறிவிப்புமே வந்திருந்த அத்துணை தமிழ் உள்ளங்களுக்கும் அளித்த உவகையை அளவிட முடியாது.
இரு புதிய பள்ளிகள் (பேக்கர்ஸ் பீல்ட் - சாண்டா மரியா) தென் கலிபோர்னியா தமிழ் பள்ளியில் இணைந்து கொண்டன. 3 இடங்களில் செயல் பட்ட நம் பள்ளிகள் இனி 5 இடங்களில் செயல்படும்.ஒவ்வொரு பள்ளியை நிர்வகிக்கவும் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்க பட்டனர். அத்தருணத்தில் எழுந்த பேரலையான வரவேற்பு கைதட்டலே, புதிய பொறுப்பாளர்களின் தரத்திற்கு சான்று.சென்ற வருட செலவீன கணக்கு, வந்திருந்த அனைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்க பட்டதே, நமது சங்கத்தின், தமிழ் பள்ளிகளின் நிர்வாக வெளிப்படைத்தன்மைக்கு சான்று.நம் விழாவின் சிறப்பு விருந்தினராக, இர்வின் நகர நிர்வாகத்திலிருந்து பார்ராஹ் கான் அவர்களை அழைத்தவிதம், விழா அமைப்பாளர்களின் தொலைநோக்கு பார்வைக்கு ஒரு சான்று.
நமது புதிய பள்ளி பேக்கர்ஸ் பீல்ட் மாணவர்களின் நடனம், அதனை அத்துணை சிறப்பாக வடிவமைத்த பேக்கர்ஸ் பீல்ட் நிர்வாகிகள், வந்திருந்த பேக்கர்ஸ் பீல்ட் குடும்பங்கள், அவர்களுக்கு சபை அளித்த கரகோஷம் அத்தனையும் சிறப்பு. நம்முடன் விழாவில் கலந்து கொள்ள 3 மணித்தியாலங்கள் பயணித்து வந்த பேக்கர்ஸ் பீல்ட் குடும்பங்கள் நமக்கு உணர்த்தியது 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்னும் மூதாதையர் வாக்கு.
சிறப்பு விருந்தினரான பார்ராஹ் கான் கையால் 10 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இது நம் பள்ளியின் 2ம் பட்டமளிப்பு விழா. பட்டம் பெற்ற அனைவரையும் வாழ்த்தி பேசிய இர்வின் நகர நிர்வாகி பார்ராஹ் கான் 'வணக்கம்' என்று ஆரம்பித்து பேசியது வந்திருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி!! பல்வேறு பட்ட கலாச்சார நிகழ்வுகளையும் அதனை ஊக்க படுத்தும் அமெரிக்கா சூழ்நிலையையும் குறிப்பிட்ட அவர், இர்வின் குளோபல் வில்லேஜ் நிகழ்வில் நம் தமிழ் கலாச்சார சாவடி ஈர்த்த கவனத்தையும் குறிப்பிட்டார். இர்வின் குளோபல் வில்லேஜ் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்களை ஈடுபடுத்தும் விழா என்பதும், பார்ராஹ் கான் அதன் அமைப்பாளர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வருட நிகழ்வின் கடைவீதியில், 5 தொழில் முறை வணிகர்களும், 9 தொழில் சாரா வணிகர்களும் கடைகள் அமைத்திருந்தனர். வழக்கம் போல அவ்வனைவரும் நிறைவான பொருளீட்டியதுடன், அத்தகு கடைகளால் நம் விருந்தினர்களின் மனதும், விழியும், வயிறும் நிறைந்தது. வந்திருந்த குழந்தைகள் அத்தகு கடைகளை மிக்க மகிழ்வுடன் நுகர்ந்தனர் என்பது கண்கூடு.
பார்ராஹ் கான் அவர்கள் கடைவீதியை வலம் வந்து, நமது நிர்வாகிகளிடம் அதனை பற்றி கேட்டறிந்து வியந்து போற்றினார்கள்.ஒரு ஞாயிற்று கிழமை மாலை வேளையில் வந்திருந்து நம்முடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மகிழ்திருந்ததன் மூலம் அவர் நம் அனைவரின் மனதையும் வென்றெடுத்தார் என்றால் அது மிகையாகாது.
புலம் பெயர்ந்த நாம், மொழியார்வத்தில் தமிழ் பள்ளி நடத்துவதும், தமிழில் பேசுவதும், விவாதிப்பதும் இயல்பான ஒன்று. ஆனால் இங்கேயே பிறந்து வளரும் அடுத்த தலைமுறை, இதே போல் தமிழ் பள்ளி நடத்தி தமிழ் பயிற்றுவித்தால், தமிழ் இலக்கிய உலகில் பங்களித்தால் அதுதான் ஒரு மொழியின் மேன்மை, வெற்றி.
தமிழ் மொழியின் தொடர்ச்சியை பற்றி கவலை கொள்ளும் எனது நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது இதுதான்ச. ன்ற வருடம் தமிழ் படித்து பட்டம் வாங்கிய வள்ளி இவ்வருடம், இளம் ஆசிரிய உதவியாளராக பணிபுரிந்து உதவியது, தமிழ் சார்ந்த போட்டிகளான திருக்குறள் சொல்லுதல், பேச்சுப்போட்டி, குறுக்கெழுத்து போட்டிகளில் இளம் சிறார்களின் பெரும் அளவிலான பங்களிப்பு போன்றவை நமக்கு உணர்த்துவது தமிழ் மொழியின் தொடர்ச்சியை.

- தினமல ர் வாசகர் ஶ்ரீராம் காமேஸ்வரன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)