அபுதாபியில் மர்ஹபா சமூக நலப்பேரவை சேவைக்கு பாராட்டு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அபுதாபியில் மர்ஹபா சமூக நலப்பேரவை சேவைக்கு பாராட்டு

மே 23,2019  IST

Comments

அபுதாபி : அபுதாபி : அபுதாபியில் வெள்ளி விழா கண்ட அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் இஃப்தார் விழா மிக சிறப்பாக இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் 18.05.2019 அன்று நடைப்பெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக தாயகத்திலிருத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர், நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, இந்திய தேசிய லீக் தலைவர் சமுதாய புரவலர் அல்ஹாஜ் பஷிர் அஹமது, லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் பேராசிரியர் கு.உ.சைபுல்லா ஹஜ்ரத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

தமிமுன் அன்சாரி உரையில், "மர்ஹபா சமூக நலப்பேரவையும், லால்பேட்டை ஜமாஅத்தும் ஒன்றினைந்து ஒற்றுமையுடன் இஃப்தார் நிகழ்ச்சியினை நடத்த வேண்டுமென நான் கடந்த ஆண்டு ரமலானில் மர்ஹபா சமூக நலப்பேரவை சார்பில் நடாத்தப்பட்ட விழாவில் கேட்டுக்கொண்டேன். இன்று ஒன்றாக ஒற்றுமையுடன் அனைவரையும் காணும் பொழுது மகிழ்ச்சி அளிக்கிறது ..! மேலும் லால்பேட்டையை சார்ந்தவர்கள் லால்பேட்டை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள ஏழை எளியோற்கு உதவி செய்வது லால்பேட்டைக்கு பெருமை சேர்ப்பதாகும். அதுபோல் மர்ஹபா சேவை பணியை பாரட்டி மதுரையில் விருது கிடைக்க பெற்றதாக வலைதளங்கள் மூலம் அறிந்தேன். வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்" என பாராட்டினார் .

அதை தொடந்து உரையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் உரையாற்றும் பொழுது, "மர்ஹபா சமூக நலப்பேரவை சிறப்பாக பணியாற்றி வருவதை நான் அறிவேன், நான் 2015 ஆம் ஆண்டு அபுதாபி வருகை தந்த பொழுது மர்ஹபா, அய்மான் சங்கமும் உற்சாகம் அளிக்கும் வகையில் வரவேற்பு அளித்தது. அப்பொழுது நான் 2015 சட்டமன்ற தேர்தலில் நிற்க வேண்டுமென கோரிக்கை வைத்து அனுப்பினார்கள் , அதன் பேரில் 2016 தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக ஏணி சின்னத்தில் நின்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றும் நல்ல வாய்ப்பை எல்லா வல்ல இறைவன் எனக்கு தந்து இருக்கின்றான், அதற்கு பல்வேறு வகையிலே உங்கள் ஊரும் (லால்பேட்டை)இருந்திருப்பதை மனதார பாரட்டுகின்றேன் என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.

இரண்டு சட்டமன்ற தங்கங்களும் இத்துனை பணி சூழலுக்கு மத்தியிலும் மர்ஹபாவின் சேவையை நினைவு கூர்ந்து வாழ்த்தியது மர்ஹபாவை சேர்ந்தவர்களுக்கும் லால்பேட்டையர்களுக்கும் மெய்சிலிர்கும் புத்துணர்ச்சியை தந்தது.அரங்கத்தில் உள்ளோறும் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.

மொத்தத்தில் புத்துணர்ச்சியும், தன்னம்பிக்கையையும் பெற்ற விழாவாக இது அமைந்தது.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

Advertisement
Advertisement
Advertisement

ஆற்றில் படகு கவிழ்ந்து 17 பேர் பலி

ஜகர்தா, இந்தோனேசியாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 17 பேர் பலியாகினர்.இந்தோனேசியாவில் திருமண கோஷ்டியினர் ஜாவா தீவிலிருந்து ஒரு ...

ஜூன் 20,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us