சான் ஆண்டோனியோ தமிழ்ப்பள்ளியின் ஆண்டுவிழா மற்றும் பட்டமளிப்பு விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சான் ஆண்டோனியோ தமிழ்ப்பள்ளியின் ஆண்டுவிழா மற்றும் பட்டமளிப்பு விழா

மே 23,2019  IST

Comments (1)

 டெக்சாஸ்,சான் ஆண்டோனியோவில் மே11 ஆம் தேதி, தமிழ்ப்பள்ளியின் 14 ஆம் ஆண்டு விழாவும் மாணாக்கர்களுக்கு பட்டமளிப்பு விழாவும் மிகச் சிறப்பாக நடந்தேறியது. திருமதி.அனிதா செந்தில்குமார் தலைமை ஆசிரியராகவும், திருமதி.திவ்யா விஜயகுமாரும்,பின் திரு.யுவராஜ் முனியன் துணை முதல்வராகவும், 30 சிறப்பான ஆசிரியர்களும், ஏறத்தாழ 120 மாணவர்கள் படிக்கும் சீரிய பள்ளி தான் சான் ஆண்டோனியோ தமிழ்ப்பள்ளி.

இங்குள்ள இந்துக்கோவில் வளாகத்தில் உள்ள 'மஹாலஷ்மி ஹாலில்' நடைபெற்றது. நுழைவாயில் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

விழா மாலை 3 மணியளவில் மாணவ மாணவிகளின் தமிழ்த்தாய் வாழ்த்துக்களுடன் தொடங்கியது.

சிறப்பு விருந்தினர்களாக முனைவர். திரு.எஸ்.சிங்கார வடிவேல், எழுத்தாளர் திரு.ஆர்.எஸ்.மணி மற்றும் முனைவர் திரு.கண்ணன் திருமலை ஆகியோர் விழாவைச் சிறப்பித்தனர்.

தளிர் நிலையிலிருந்து ஆரம்பித்து 7 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளும் கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

தளிர் நிலைக் குழந்தைகள் அழகாய் 'உலக நீதி' ஓதினார்கள்.

மழலை மாணவர்கள் ஐவகை நிலங்களை, ஐந்து குழுக்களாகப் பிரிந்து, அதற்கேற்ற ஆடைகள் அணிந்து,சிறுகுறிப்பாலும் விளக்கி அழகான பாடல்களுக்கு அற்புதமாக ஆடி அந்நிலத்தின் தன்மையை அனைவருக்கும் நன்கு புரியவைத்தனர்.கைத்தட்டல்கள் ஆசிரியர்களுக்கும் சேர்த்தே தட்டப்பட்டன.

நிலை ஒன்று மாணவர்கள் 'விக்ரமாதித்யனும் வேதாளமும்' கதையை சிறந்த நாடகமாக வழங்கினர்.

நிலை இரண்டு மாணவர்கள் தமிழ்ப் பாரம்பரிய 'ஒயிலாட்டமும்,கும்மியாட்டமும்' வழங்கினர்.

நிலை மூன்று மாணவர்கள் 'தக திமி தா' எனும் நாட்டுப்புற நடனம் வழங்கினர்.

நிலை நான்கு முதல் ஏழு வரையுள்ள மாணவர்கள் 'இது நம்ம ஊரு' எனும் நாடகம் அரங்கேற்றினர்.

அடுத்து பரிசளிக்கும் விழா நடைபெற்றது. சமீபத்தில் நடந்த பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நிலை மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர். 100 %வருகை பதிவு செய்த மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் பட்டமளிக்கப் பட்டது.

இத்தனை சிறப்பாக அமைய, வருடம் முழுதும் உழைத்த ஆசிரியர்கள்,அலுவலக நிர்வாகிகள்,கல்வி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்,பாடத்திட்டம் வரையறுப்போர் மற்றும் தன்னார்வலத் தொண்டு செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பரிசுகள் அளித்து கௌரவித்தனர். கடந்த வருடம் நடந்த போட்டிகளில் (திருக்குறள் போட்டி,தமிழ்த் தேனீ,பேச்சுப் போட்டி) நடுவர்களாக கலந்துகொண்டோருக்கும் பரிசுகள் வழங்கினர். மாணவர்கள்-ஆசிரியர்கள் குழுப் புகைப்படம் எடுக்கப்பட்டது.

திரு.ரங்கேஷ் ராதாகிருஷ்ணன் தூய தமிழில் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிகள் அனைத்தும் அர்த்தமுள்ளவைகளாக கண்களுக்கும் காதுகளுக்கும் குளிர்ச்சியாகவும்,இனிமையாகவும் இருந்தன.

பயிற்சியளித்த அத்தனை ஆசிரியர்களுக்கும் மிகுந்த பாராட்டுக்கள். புகைப்படங்களும்,வீடியோக்களும் சிறப்பாக எடுத்துக் கொடுத்த நண்பர்களுக்கு மிக்க நன்றிகள். விழா முடிவில் ஸ்பைஸ் ரெஸ்ட்டாரெண்ட்டின் சுவையான இரவு உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இத்தமிழ்ப் பள்ளி பற்றி மேலும் விவரங்களுக்கு இணைத்துள்ள இணையதளத்தில் சென்று அறியலாம்

http://www.satamilschool.org

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Siva Panchalingam - Toronto,Canada
27-மே-201905:21:07 IST Report Abuse
Siva Panchalingam வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)