அஹோபில மடம் பெருமாள் நவநீதக்ருஷ்ணர் பிட்ஸ்பர்க் ஸஞ்சாரம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அஹோபில மடம் பெருமாள் நவநீதக்ருஷ்ணர் பிட்ஸ்பர்க் ஸஞ்சாரம்

மே 27,2019  IST

Comments

 

அமெரிக்கா வாழ் வைணவர்களின் மனம் உருகிய பக்தியுடன் கூடிய அழைப்பிற்கு இணங்கி அமெரிக்கா அஹோபில பெருமாள் நவநீதக்ருஷ்ணர் பல நகரங்களுக்கு ஸஞ்சாரம் செய்வது 18 வருட காலங்களாக வழக்கமாக உள்ளது.

அஹோபில மடத்தின் 45வது பட்டம் ஶ்ரீமத் அழகிய சிங்கர், லக்ஷ்மிந்ருஸிம்ஹ திவ்ய பாதுகா ஸேவக ஶ்ரீவண் சடேகாப ஶ்ரீ நாராயண யதீந்த்ர மஹா தேசிகன், 2001ம் வருடம் ஶ்ரீ நவநீத க்ருஷ்ணரின் திவ்ய மங்கள விக்ரஹத்தை ப்ரதிஷட்டை செய்து, தாம் சில நாட்கள் அவரை ஆராதித்து, பிறகு அமெரிகக்காவில் வாழும் சில சிஷ்யர்களிடம் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று அளித்தார். அவர்களிடம், அமெரிக்கா மிகவும் பரந்ததேசமாக இருப்பதாலும், ஆதலால் எல்லா ஊர்களிலும் கோவில் இல்லாததாலும், பக்தர்கள் எல்லோராலும் நெடு தூரம் பயணித்து கோவிலுக்கு சென்று பெருமாளை ஸேவிக்க முடியாததாலும், இந்த க்ருஷ்ணரை பக்தர்களின் இல்லத்திற்கு எழுந்தருள செய்து, திருமஞ்சனம் மற்றும் ஊஞ்சல் உத்சவம் நடத்தி அவர்களுக்கு நல்ல பகவத் அனுபவத்தை அளிக்க வேண்டும் என்றும் நியமித்தார். மேலும் பெருமாள் ஆராதனம், திருமஞ்சனம், டோலை உத்சவம் பண்ணுவதற்கு வேண்டிய முறைகளையும் கடைபிடிக்க வேண்டிய ஆசாரம் அனுஷ்டானங்கைளையும் ஸாதித்து அருளினார். அன்று முதல் ஶ்ரீமத் அழகிய சிங்கரின் திரு உள்ளத்தின் படியே தினந்தோறும் உத்ஸவங்கள் தவறாமல் நடந்து வருகிறது. இத்துடன் ஆழ்வார்கள், மற்றும் அஹோபில மட ஆச்சார்யர்களின் திருநக்ஷ்த்திர நாட்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நவநீதக்ருஷ்ணரின் கருணை ருசியை அனுபவித்த பக்தர்கள், அவரை ஆண்டுதோறும் தம் இல்லத்திற்கு அழைத்து, மிகுந்த அன்புடன் பஞ்ச கால ஆராதனைகளான விஸ்வரூபம், அபிகமனம், இஞ்சை, பானகம், ஏகாந்தம் ஆகியவற்றை திருமஞ்சனம் மற்றும் ஊஞ்சல் உத்சவத்துடன் சேர்த்து செய்து அவரை மகிழ்வித்து தானும் ஆனந்தம் அடைகின்றனர். நவநீதக்ருஷ்ணரும் பக்தர்களின் அழைப்பிற்கு இணங்கி பல ஊர்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இவ்வரிசையில் கடந்த சனிக்கிழமை பிட்ஸ்பர்க் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள ராம் கோபால் அவர்களின் இல்லத்திலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை பிட்ஸ்பர்க் நகரின் தெற்கு பகுதியில் உள்ள மாதவன் தூப்புல் அவர்களின் இல்லத்திலும் எழுந்தருளினார். அப்போது நித்ய பாராயண ஸ்லோகங்களுடன் வேத பாராயணமும், நாலாயிர திவ்யப்பரபந்த பாடல்களும் வாசிக்கப்பட்டது. பின்னர் கொலம்பஸ் நகர பக்தர்களின் அன்பு மழையில் நனைய புறப்பட்டுச் சென்றார்.

- நமது செய்தியாளர் ஜெயஶ்ரீ சௌந்தரராஜன் 


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

Advertisement
Advertisement
Advertisement

ஜூன் 24 ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை: ஜூன் 28 ம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் ஜூன் 24 ம் தேதி காலை 11 மணியளவில், தமிழக அமைச்சரவை கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ...

ஜூன் 20,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us