சான் ஆண்டோனியோவில் பிரமாண்டமான 'சாந்த்ராத் பஜார்' | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சான் ஆண்டோனியோவில் பிரமாண்டமான 'சாந்த்ராத் பஜார்'

ஜூன் 07,2019  IST

Comments

 

டெக்சாஸ் சான் ஆண்டோனியோவில் உள்ள 'முஸ்தபா குரோசரி' இந்தியர்கள் விரும்பும் உணவுப் பொருள்களும், பிற பொருள்களும் கிடைக்கும் ஓர் பிரபலமான மளிகை கடை.

இதன் உரிமையாளர் திரு.சையத் சித்திக், தன் நட்புக்குழுவோடு ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் மாதத்தின் 30 நோன்பு நாட்களும் முடிந்து வரும் ரம்ஜான் பண்டிகையை, தான் மட்டுமல்லாது சான் ஆண்டோனியோவில் உள்ள அனைத்து மொழி,இன மக்களையும் அழைத்து மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்.

ஜூன் 3 ஆம் தேதி மாலையிலிருந்து நண்பர்களும்,உறவினர்களுமாய் குழும ஆரம்பித்து, 'சாந்த்ராத் பஜார்' எனப்படும் திருவிழாவில் கிட்டத்தட்ட 2000 மக்கள் ஒன்று கூடி அந்த இரவை பகல் பொழுதாக்கி வெற்றிகரமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். 'முஸ்தபா குரோசரி' கடை வாசலில் சகல பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கடந்த 11 வருடங்களாக இவ்வாறு சிறந்த முறையில் கொண்டாடப்படுகிறது.

பாப்கார்ன் மற்றும் தேநீர் அனைவருக்கும் இலவசமாய் வழங்கப்பட்டன. உடைகள், நகைகள், காலணிகள், ஹென்னா என கடைகள் போட்டு அமர்க்களப்படுத்தினர். ஃபலூடா, சமோசா-சாட் விற்கப்பட்டன.

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 'ஓயோ' காபி கோப்பைகள் பரிசளிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அதிர்ஷ்ட குலுக்கல் மூலமும் பரிசுகள் அளிக்கப்பட்டன.

ஜாதி மதம் பாராமல் நடந்த இந்த 'சாந்த்ராத்' விழா மனித நல்லிணக்கத்திற்கு இலக்கணம்.

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)