அஜ்மானில் சாதனை படைத்த தமிழக குழந்தைகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அஜ்மானில் சாதனை படைத்த தமிழக குழந்தைகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி

ஜூன் 09,2019  IST

Comments

அஜ்மான் : அஜ்மானில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் தமிழக குழந்தைகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 

இந்த நிகழ்ச்சிக்கு அல் ஹிரா மருத்துவ நிலையத்தின் சேர்மன் டாக்டர் இல்லியாஸ் காசிம் தலைமை வகித்தார். அப்துல் கனி வரவேற்புரை நிகழ்த்தினார். 

தமிழக காங்கிரஸ் பிரமுகர் எஸ்.எம். இதாயத்துல்லா சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அமீரகத்தில் தமிழ்க் குழந்தைகள் சிறப்பான முறையில் பல்வேறு திறமைகளை கொண்டு இருந்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். அவர்களின் பெற்றோர் இதற்கு உற்சாகம் அழித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற குழந்தைகளை இந்த மருத்துவ மையம் பாராட்டி உற்சாகம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.


சமூக ஆர்வலர் கல்லிடைக்குறிச்சி ஏ. முஹம்மது மைதீன் பொதுவாழ்க்கையில் தனது அனுபவங்களை சிறப்பான முறையில் நினைவு கூர்ந்தார். நாம் ஒரு உதவி செய்யும் போது நம்மை அறியாமல் பல திசைகளிலும் உதவிகள் கிடைத்து வருவதை அனுபவித்து மகிழலாம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஐந்தாயிரம் வருடங்களுக்கும் அதிகமான நாட்களை எந்த நாளை கூறினாலும் அதன் கிழமையை சொல்வது உள்ளிட்ட பல திறமைகளை படைத்த கீழக்கரை பஹீம், இளம் கவிஞர் மற்றும் எழுத்தாளர் அஃப்ரா நூர், கல்வி மற்றும் சமூக சேவையில் பல விருதுகளை பெற்றுள்ள புதுச்சேரியைச் சேர்ந்த ஆதித்ய சர்மா, இளம் விருதாளர் ஹுமைத் அபுபக்கர் ஆகியோர் நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் சமூகத்துக்கு சிறப்பான பங்களிப்பினை வழங்கி வரும் அபிராமம் ஹபிபுல்லா, பசுபதிகோவில் ரபீக், அய்யம்பேட்டை சுலைமான், தேவிபட்டிணம் ஜமாஅத்தார்கள், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியானது தங்களுக்கு மிகவும் உற்சாகம் தருவதாக இருந்ததாக அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் ஹசீனா பர்வீன், யாஸ்மின் அபுபக்கர், ஷமீமா பர்வீன், ஹேமாவதி உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

காரைக்கால் வானொலியின் முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளர் பாத்திமா நிகழ்ச்சியை சிறப்புடன் தொகுத்து வழங்கினார்.

இதில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)