ஆக்லாந்தில் உள்ள ஒரு முக்கியமான குழு ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம். இது நன்பர்காளாக சேர்த்து பக்தி மார்க்கத்தோட அமைக்கப்பட்ட குழுவாகும். இவர்கள் இந்து பண்டிகைகள், பூஜைகள் எல்லாவற்றையும் மிகச்சிறப்பாக நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
இதில் மாதம் இரண்டு முறை பிரதோஷ பூஜை, வருஷப்பிறப்பன்று பஞ்சாங்க படனம், விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, நவராத்திரி பூஜை, ஐயப்ப படி பூஜை இவற்றையெல்லாம் விமரிசையாக கொண்டாடப்படும். மேலும் தைப்பூசம் 9 நாளும் சிறப்பான பூஜைகள் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து காப்பு கட்டுவதில் இருந்து இறுதி நாளன்று காவடி, பால்குடத்துடன் முருகனுக்கு அபிஷேகம் நடத்தி விமரிசையாக கொண்டாடப்படும். பல தரப்பட்ட மக்கள் கலந்து கொள்ளும் விழா இதுவாகும்.
மேலும் வருஷத்திற்கு ஒரு முறை இந்தியாவிலிருந்து பிரபலமான இசைக்கலைஞர்களை வரவழைத்து நாம சங்கீர்த்தனம் நடத்தி அதில் ராதா கல்யாணம், சீதா கல்யாணம், வள்ளி கல்யாணம் போன்றவற்றை நடத்துகிறார்கள். மேலும் உபன்யாசங்கள், விரிவுரைகள் போன்றவைகளும் நடத்துகிறார்கள். இதன் மூலம் வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள், துஷ்யந்த் ஸ்ரீதர், முரளீதர ஸ்வாமிகளின் சிஷ்யர்கள், உடையாளூர் கல்யாணராம பாகவதர், கடையநல்லூர் ராஜகோபாலன் மற்றும் டாக்டர் கணேஷ் ஆகியோர் வந்துள்ளனர்.
இந்த குழுவை தலைமையேற்று நடத்துபவர்கள் ஸ்ரீ குமார் ஹரி, டாக்டர் வரதராஜன், ஸ்ரீ ஸ்ரீதர் (பொருளாளர்), ஸ்ரீ கணேஷ் குமார், ஸ்ரீ சங்கரன், ஸ்ரீ அசோக் குமார், ஸ்ரீ கிருஷ்ணன்,ஸ்ரீ யஷவந்த்குமார் மற்றும் ஸ்ரீ கோபால் ஸ்ரீநிவாசன்.
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்
ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் 129வது இரத்ததான முகாம்....
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.