ஆக்லாந்து தமிழ் ஆசோஸியேஷன் கடந்த 2 வருடங்களாக ஆரம்பித்து நன்றாக ஒற்றுமையுடன் செயல்பட்டு வரும் ஒரு கழகம். திரு வை. ரவீந்திரன் அவர்களை தலைவராகவும், திரு வேல்முருகன் அவர்கள் துணைத்தலைவராகவும், திரு முரளிகுமார் அவர்கள்செகரெட்டரியாகவும் நியமிக்க பட்டுள்ளனர். மற்ற கமிட்டி மெம்பர்கள்திரு அரவிந்தகுமார், திருமதி மாலினி யுகேந்திரன், திரு பலராமன், திருமதி மீனாட்சி வீரப்பன், திரு கணேஷ், திரு சையத்கபீர், திரு நாகேஷ்நே மணி,மற்றும் திரு ஹரிஹரன் ஆகியோர் ஆவார்கள்.
ஆக்லாந்தில் தமிழ் கழகம் தமிழ் சமூகத்திற்கு நிறைய தொண்டு ஆற்றுகிறது. தமிழ் பள்ளி மூலம் சுமார் நாற்பதுக்கும் மேல் உள்ள குழந்தைகள் தமிழ்கற்கிறார்கள். மேலும் தீபாவளி, பொங்கல், தமிழ் வருஷப்பிறப்பு முதலியவற்றை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இந்தியாவிலிருந்து தலை சிறந்த சினிமா கலைஞர்கள், நாடகம், மெல்லிசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி மற்றும் பல காலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்துகிறார்கள். மேலும் பொங்கல் விழாவை சமையல, கோலப்போட்டி வைத்து சிறந்த போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து ஊக்குவிக்கிறார்கள்.
மற்றும் இந்த வருடம் முதல் பெண்களை கௌரவிக்கும் விதமாக சிறப்பாக தமிழ்சேவை செய்யும் பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு ஞாயிறும் சிறப்பு பண்பலையில்மெ ல்லிசை நிகழ்ச்சி மூலம் சினிமா பாடல்களோடு நல்ல கருத்துக்களை சொல்லிவருகிறார்கள்.
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்
ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் 129வது இரத்ததான முகாம்....
பாடகி சுதா ரகுநாதனுக்கு நியூயார்க் மேயர் கவுரவம் ...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.