கொலோன் நகரில் நடந்த 'இந்திய விழா' | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கொலோன் நகரில் நடந்த 'இந்திய விழா'

ஜூலை 06,2019  IST

Comments

  

ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் முயற்சியால், ஜூன் 29 அன்று கொலோன் நகரில் நடந்த 'இந்திய விழாவில்', நம் நாட்டின் மென்சக்தி சிறப்பாக அரங்கேறியது . பிரதீபா பார்க்கர்(இந்திய துணைத் தூதரகத்தின் தாளாளர்) முன்னிலையில், ஷோ ஆன்டவர்ப்ஸ்(கொலோன் துணை மேயர்) குத்து விளக்கேற்றி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். விழாவின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஜெயபாலன் (இந்தியாவின் நண்பர்கள் அமைப்பு) உரையாற்றினார்.

சரவணன், இந்திய துணைத் தூதரகம் மற்றும் கொலோன் நகர் அமைந்துள்ள நார்த் ரைன் வெஸ்டபாலன் மாநிலத்தில் உள்ள இந்திய அமைப்புகள்/மாணவர் அமைப்புகள் ஆகியற்றுடன் இணைந்து, இவ்விழாவை திறம்பட திட்டமிட்டு செயல் வடிவம் கொடுத்தனர். விழா நிகழ்ச்சிகள் நண்பகல் 12 மணிக்கு தொடங்கி 7 மணி வரை சிறப்பாக நடந்தேறியது. கொலோன் நகரில் மிக பிரபலமான நியூ மார்க்கெட்டில் திறந்த வெளியில் நிகழ்ச்சி மேடை அமைக்கப்பட்டு பல்லாயிரம் மக்கள் விழாவை கண்டு களித்தனர்.

மூன்று நுழைவு வாயில்கள் வழியாக விழா பகுதியில் பொதுமக்கள் நுழைந்தவுடன், பாரம்பரிய முறையில் ஆரத்தி எடுத்து, நெற்றியில் குங்குமமிட்டு , இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டனர். மேலும், அங்கே நடுநாயகமாக இருந்த விநாயகர் சிலை அனைவரையும் ஈர்த்து செல்பி மையமாக மாறியது. மேலும், புகைப்பட அறை, கைவினை விற்பனை கடைகள் மற்றும் புடவை அணியும் மைய்யம் மக்களை வெகுவாக கவர்ந்தன.

ஒன்றன் பின் ஒன்றாக 35 நிகழ்ச்சிகள் மேடையில் அரங்கேறியது. பரதம், கதக் போன்ற பாரம்பரிய நடனங்கள் மற்றும் பாங்க்ரா, மயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற கிராமிய நடனங்கள் மற்றும் பாலிவுட் , கோலிவுட், டோலிவுட் , மோலிவுட் நடனங்களை மக்கள் ஆரவாரத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.

இந்த கலை நிகழ்ச்சிகளுக்கு இனையாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட உணவகங்களில் 250 இந்திய உணவு வகைகள் அனைவரின் நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் பரிமாறப்பட்டன. குலாப் ஜாமுன், ரசகுல்லா, கட்லட், பாவ் பாஜி போன்ற துரித உணவு வகைகள் , தோசை, இட்லி, வடை போன்றவை பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது. விழா நிறைவில் சான்றிதழ்கள் வழங்க பெற்ற ஒருங்கிணைப்பாளர்கள், கலை நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் மற்றும் தன்னாலர்வலர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் விடைபெற்று சென்றனர். விழாப்பகுதியை சுற்றியிருந்த மரங்கள் நடந்தேறிய வண்ணமிகு இந்திய விழாவிற்கு சாட்சியாக மாலை வெயிலில் மின்னின.

- தினமலர் வாசகர் கணேஷ் 

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வரதராஜனின் “கண்ணப்ப நாயனார்” நாடகம்

ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வரதராஜனின் “கண்ணப்ப நாயனார்” நாடகம் ...

ஆகஸ்ட் 3 ஆம் நாள் ஆக்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பாக கலைமாமணி வீரமணிராஜு இசை மாலை

ஆகஸ்ட் 3 ஆம் நாள் ஆக்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பாக கலைமாமணி வீரமணிராஜு இசை மாலை ...

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக புதிய நிர்வாகிகள்- 2019

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக புதிய நிர்வாகிகள்- 2019...

சிகாகோ தமிழ்ச் சங்கம் 2019

சிகாகோ தமிழ்ச் சங்கம் 2019...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)