தொடரும் அமெரிக்கா-தமிழ்நாடு அறக்கட்டளையின் தொண்டு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தொடரும் அமெரிக்கா-தமிழ்நாடு அறக்கட்டளையின் தொண்டு

ஜூலை 09,2019  IST

Comments

அமெரிக்காவில் பல பகுதிகளில் செயலாற்றி வரும் 'தமிழ்நாடு அறக்கட்டளை', கடந்த பல வருடங்களாக அமெரிக்க தமிழ்வாழ் மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஓர் அருமையான இணைப்புப் பாலமாக செயல் பட்டு வருகிறது.

அமெரிக்காவில் தமிழ்நாடு அறக்கட்டளை, பல்வித நிகழ்ச்சிகள் நடத்தி, அதன் மூலம் நிதிஉதவி திரட்டி தமிழ்நாட்டின் இயற்கை சீரழிவுகளில் மிகவும் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு நிதிஉதவி செய்தல், பள்ளிகளுக்கும் மனநிலை காப்பகங்களுக்கும் நல்ல கட்டிடம் கட்டிக் கொடுத்தல், குழந்தைகளுக்கு கல்வி வசதி ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற நிறைய நற்காரியங்கள் செய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டு,புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டம் 'முத்தன்பள்ளம்' எனும் கிராமத்தை முன்னேற்ற, பேருதவி செய்துள்ளது. களம் இறங்கி மக்களோடு மக்களாய் செயல்பட்டு வரும் புதுக்கோட்டையை சேர்ந்த கல்வியாளர் சங்கமம் ஒருங்கிணைப்பாளரும், ஆசிரியருமான சதீஷ் குமார், அமெரிக்காவில் தமிழ்நாடு அறக்கட்டளை நிறுவனத்தோடு தொடர்புள்ள நிலையில், அவர்களின் உதவியோடு முத்தன்பள்ளம் கிராமத்திற்கு உதவி புரிந்துள்ளார்.

ஏற்கெனவே அடிப்படை வசதிகள் ஏதும் இல்லா இக்கிராமம், கஜா புயல் தாக்கத்தால் மேலும் நாசமடைந்தது. சாலை வசதி,குடியிருப்பு வசதி,மின்சார வசதி ஏதும் சரியாக இல்லாத காரணத்தால் இக்கிராமம் போராட்ட வாழ்க்கையில் தான் உள்ளது. இந்நிலையில் இங்கிருக்கும் மாணவர்கள் தினமும் ஐந்து கிமீ க்கு மேல் நடந்து தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். இதனை அறிந்த சதீஷ் குமார், தமிழ்நாடு அறக்கட்டளையின் உதவியுடன், இம்மாதம் ( 05 .07 .2019 ) 7 ஆம் தேதி அன்று முதற்கட்டமாக மாணவர்களுக்கு பத்து மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. மேலும் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஐந்து இடங்களில் சூரிய ஒளியில் இயங்கும் தெருவிளக்குகள் அமைக்கப் பட்டன.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி இளங்கோ, அரசுடன் இணைந்து வீடு கட்டித் தரவும் ஆவண செய்வோம் என்றார்.

இதனால் மகிழ்வுற்ற மக்கள், தமிழ்நாடு அறக்கட்டளைக்கும், தங்கள் உழைப்பால் சம்பாதித்த பணத்தை, நம் சொந்த மண்ணில் வாழும் மக்களும் வாழ தொடர்ந்து நிதியுதவி செய்துவரும் அமெரிக்க வாழ் தமிழர்களுக்கும், இதனை உடன் இருந்து செயலாற்றிய கல்வியாளர் சங்கமம் சதீஷ் குமாருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வரதராஜனின் “கண்ணப்ப நாயனார்” நாடகம்

ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வரதராஜனின் “கண்ணப்ப நாயனார்” நாடகம் ...

ஆகஸ்ட் 3 ஆம் நாள் ஆக்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பாக கலைமாமணி வீரமணிராஜு இசை மாலை

ஆகஸ்ட் 3 ஆம் நாள் ஆக்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பாக கலைமாமணி வீரமணிராஜு இசை மாலை ...

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக புதிய நிர்வாகிகள்- 2019

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக புதிய நிர்வாகிகள்- 2019...

சிகாகோ தமிழ்ச் சங்கம் 2019

சிகாகோ தமிழ்ச் சங்கம் 2019...

Advertisement
Advertisement
Advertisement

திமுக வேட்பாளர் மனு தாக்கல்

வேலூர்: பணப்பட்டுவாடா பிரச்னை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் லோக்சபா தொகுதிக்கு ஆக., 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பில், ...

ஜூலை 17,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)