தமிழ்நாடு பவுண்டேஷன் ஹூஸ்டன் பகுதி தந்தையர் தின விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தமிழ்நாடு பவுண்டேஷன் ஹூஸ்டன் பகுதி தந்தையர் தின விழா

ஜூலை 09,2019  IST

Comments

 தமிழ்நாடு பவுண்டேஷன் ஹூஸ்டன் பகுதி சுகர்லேண்ட் மெமோரியல் பூங்காவில் தந்தையர் தின விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தது. அலுவலகப் பொறுப்பாளர்களும் ஆலோசனை குழு உறுப்பினர்களும் அவரவர் குடும்பத்துடன் காலை 10 மணிக்கே பூங்காவிற்கு வந்து விழா ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர். பங்குகொள்ள வந்தவர்களில் சிலர் மதிய உணவு வகைகள் ஆடியோ வீடியோ இன்னும் பிற தேவைகளையும் மேலும் உடற்பயிற்சி கருவியையும் தவறாது எடுத்து வந்தனர்.

தமிழ்நாடு பவுண்டேஷன் ஹூஸ்டன் பகுதி தலைவர் மாலா கோபால் வரவேற்புரையை நன்றே நடத்தினார். அடுத்து செயலாளர் டாக்டர் நளினி பாலச்சந்திரனும், பொருளாளர் புனிதா தங்கராஜிடம் அறக்கட்டளையின் பல்வேறு பொறுப்புகளையும், அதற்குரிய அங்கத்தினர்களையும் ,உறுப்பினர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். இவ்வமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களின் சேவையை தலைவர் மாலா பெரிதும் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், தொழிலதிபர் எஸ்.ஜி அப்பன், ஹூஸ்டன் நாடகமணி அனந்தகிருஷ்ணன், சென்னை ஜெகதீசன் ஆகிய மூவரும் ஆலமரம் அப்பா என்று சிறப்பிக்கபட்டனர். ஆலமரம் மிக விரிந்து, உயர்ந்து, நிழல்கள் தந்து, விழுதுகள் பல பூமியில் விட்டு சமூகத்திற்கு தொண்டாற்றுகின்றது. அதற்கு நிகராக இம்மூவரும் முன்னோடியாக சிறப்பிக்கப்பட்டனர். இந்த விழாவில் பல ஹூஸ்டன் அன்பர்கள் பாட்டு பாடி மற்றவர்களை மகிழ்வித்தனர். குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை அமைப்பு தன்னிலையாகவா அல்லது பெற்றோர்களின் முழு வழிகாட்டுதலா என்ற தலைப்பில் அரட்டை அரங்கம் வெகு விறுவிறுப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி அனைவருக்கும் மகிழ்ச்சியை வழங்கியது பெரிதும் வெற்றியையும் வழங்கியது. பாட்டும், மகிழ்ச்சியும், அரட்டை அரங்கம் குதுகலமும், கலந்ததாக அமைந்தது இந்த ஆலமரம் தந்தையர் தின விழா.

- தினமலர் வாசகர் தங்கராஜ் பேச்சியப்பன்


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வரதராஜனின் “கண்ணப்ப நாயனார்” நாடகம்

ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வரதராஜனின் “கண்ணப்ப நாயனார்” நாடகம் ...

ஆகஸ்ட் 3 ஆம் நாள் ஆக்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பாக கலைமாமணி வீரமணிராஜு இசை மாலை

ஆகஸ்ட் 3 ஆம் நாள் ஆக்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பாக கலைமாமணி வீரமணிராஜு இசை மாலை ...

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக புதிய நிர்வாகிகள்- 2019

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக புதிய நிர்வாகிகள்- 2019...

சிகாகோ தமிழ்ச் சங்கம் 2019

சிகாகோ தமிழ்ச் சங்கம் 2019...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)