சிங்கப்பூரில் கவிமாலை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் கவிமாலை

ஜூலை 10,2019  IST

Comments

 இருபதாம் ஆண்டின் முதல் கவிமாலை என்ற வரலாற்றுச் சிறப்போடு 229 ஆம் மாதக் கவிமாலை தேசிய நூலக வளாக அரங்கில் ஜீன் 29 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதல் அங்கமாக கவிஞர்கள் தங்களுக்குப் பிடித்த – படித்த – வடித்த கவிதைகளைப் படைத்தனர். போட்டிக் கவிதைகள் பற்றிய பொதுக் கருத்து விவாத அங்கத்தில் “ ஊடகம் “ எனும் தலைப்பிற்கு வந்த 20 கவிதைகளில் சிறந்த மூன்று கவிதைகள் திரையிடப்பட்டு விவாதிக்கப்பட்டன. கவிஞர் பா.திருமுருகன் இந்த அங்கத்தை வழிநடத்தினார். 

கவிதை நூல் கருத்துரை அங்கத்தில் கவிஞர் அறிவுமதியின் “ நட்புக்காக “ கவிதை நூலிலிருந்து சில சிறந்த கவிதைகளைக் கவிஞர் பாலமுருகன் தம் கண்ணோட்டத்தில் விளக்கினார். புரவலர் ஜோதி மாணிக்க வாசகம் மற்றும் புலவர் மு.சந்திரசேகர் ஆகியோர் கவிமாலையின் இருபது ஆண்டு வெற்றிப் பயணம் குறித்துப் பாராட்டி வாழ்த்தினர். கவிமாலைத் தலைவர் கவிஞர் இறைமதியழகன் தமதுரையில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் கவிமாலை என்ற அமைப்பைத் தோற்றுவித்த கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ – பின்னர் கட்டிக் காத்த கவிஞர் மா.அன்பழகன் ஆகியோர் சேவைகளை வெகுவாகப் பாராட்டியதோடு தற்போதைய செயலவை உறுப்பினர்கள் - கரங்கொடுக்கும் புரவலர்கள் – ஆதரவு நல்கும் பத்திரிகையாளர்கள் – அரவணைக்கும் நிறுவனங்களை நன்றியுணர்வோடு போற்றுவதாகக் குறிப்பிட்டார்.

நிகழ்வில் சிங்கப்பூருக்கான இலங்கைத் துணைத்தூதர் அமீர் அஜ்வத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சிறந்த தமிழறிவும் தமிழ் மக்களோடு நெருங்கிய தொடர்பும் கொண்ட அஜ்வத் தமதுரையில் தமிழ் மொழி வளர்ச்சியின் அவசியத்தையும் அதன்வழி சமுதாயத்திற்குக் கிடைக்கும் பலன்களையும் குறிப்பிட்டார். “ செவிநுகர் கனிகள் “ எனக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் கூறியதை நினைவு கூர்ந்த அவர் கவிமாலையின் சேவைகளை வெகுவாகப் பாராட்டினார். ஓமன் நாட்டில் பணியேற்க விருக்கும் அவருக்கு இது ஒரு பிரியா விடை நிகழ்வாகவும் அமைந்தது. முதன்முறையாக “ ஸ்கைப் “ வழி கவிமாலைச் சொற்பொழிவு கேட்க ஏற்பாடு செய்து நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் தமிழ்ப் படைப்பாளர் பேரியக்க மாநிலப் பொதுச் செயலாளர் கவிஞர் ஜெயபாஸ்கர் சிறப்புரை ஆற்றினார். இம்மாதக் கவிதைப் போட்டியில் கவிஞர்கள் கி.கோவிந்தராசு – ஜாகிர் உசைன் ஆகியோர் முதற் பரிசும் கவிஞர்கள் மா.அன்பழகன் – அ.பிரபா தேவி மற்றும் இளமாறன் ஆகியோர் இரண்டாம் பரிசினையும் கவிஞர்கள் தியாக ரமேஷ் – முத்தமிழ் சத்தியா மற்றும் பழ.மோகன் ஆகியோர் மூன்றாம் பரிசினையும் பெற்றனர். கவிஞர் கி.கோவிந்தராசு நிகழ்வினை கவிநயத்தோடு நெறிப்படுத்தினார்.


- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வரதராஜனின் “கண்ணப்ப நாயனார்” நாடகம்

ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வரதராஜனின் “கண்ணப்ப நாயனார்” நாடகம் ...

ஆகஸ்ட் 3 ஆம் நாள் ஆக்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பாக கலைமாமணி வீரமணிராஜு இசை மாலை

ஆகஸ்ட் 3 ஆம் நாள் ஆக்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பாக கலைமாமணி வீரமணிராஜு இசை மாலை ...

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக புதிய நிர்வாகிகள்- 2019

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக புதிய நிர்வாகிகள்- 2019...

சிகாகோ தமிழ்ச் சங்கம் 2019

சிகாகோ தமிழ்ச் சங்கம் 2019...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)