டென்மார்க்கில் புத்தக வெளியீட்டு விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

டென்மார்க்கில் புத்தக வெளியீட்டு விழா

ஜூலை 10,2019  IST

Comments (1)

டென்மார்க் : டென்மார்க், ஒகூஸ் நகரில் ஆத்திச்சூடி டேனிஷ் மொழி பெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலை புதுவைப் பேராசிரியர் மு. இளங்கோவன், மொழிப் பெயர்ப்பாளர் மரீனா ஸ்டின் ஐசாக் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் டென்மார்க் தமிழ் அறிஞர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் ஜீவகுமாரன், கஜேந்திரன் ஊடகவியலாளர் கி. செ. துரை மற்றும் டென்மார்க் தமிழ்ச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க, விழா இனிதே நடந்தது. இவ்விழாவில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்களின் பாராட்டுக்களை ஆசிரியருக்கு தெரிவித்துக் கொண்டனர்.
- தினமலர் வாசகர் தாமோதரன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வரதராஜனின் “கண்ணப்ப நாயனார்” நாடகம்

ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வரதராஜனின் “கண்ணப்ப நாயனார்” நாடகம் ...

ஆகஸ்ட் 3 ஆம் நாள் ஆக்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பாக கலைமாமணி வீரமணிராஜு இசை மாலை

ஆகஸ்ட் 3 ஆம் நாள் ஆக்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பாக கலைமாமணி வீரமணிராஜு இசை மாலை ...

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக புதிய நிர்வாகிகள்- 2019

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக புதிய நிர்வாகிகள்- 2019...

சிகாகோ தமிழ்ச் சங்கம் 2019

சிகாகோ தமிழ்ச் சங்கம் 2019...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
gajendran - Trige,Denmark
11-ஜூலை-201916:22:47 IST Report Abuse
gajendran நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🇩🇰 - ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து டென்மார்க் நாட்டின் " ஓகூஸ்" ( Aarhus) மாநகரில் வாழ்ந்துவரும் தமிழர்களாகிய நாங்கள் " ஓகூஸ் தமிழர் ஒன்றியம்" ( Tamils Welfare Association) எனும் பெயரில் தொண்டு அமைப்பாக செயற்பட்டு வரும் அதேவேளை, டென்மார்க் நாட்டில் தமிழ்மொழி தழைப்பதற்கும் எம்மாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதன் ஒரு அங்கமாக " ஞானத்தாய் ஔவையார் அருளிய ஆத்திசூடி" நூலை டேனிஷ் மொழியில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளோம். அந்த நூல் வெளியீட்டு விழா நிகழ்வு தொடர்பான செய்தியை உலகம் அறியும் வண்ணம் தெரியப்படுத்திய " தினமலர்" செய்திப் பத்திரிகைக்கும், தினமலர் வாசகர் மதிப்புமிகு தாமோதரன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நா. கஜேந்திரன் டென்மார்க்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us