ஜெர்மனியில் கோகோ கோலா விளம்பரத்தில் இடம் பிடித்த இந்திய உணவு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஜெர்மனியில் கோகோ கோலா விளம்பரத்தில் இடம் பிடித்த இந்திய உணவு

ஜூலை 16,2019  IST

Comments

விஜய், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் போது அதன் விற்பனை விகிதம் பல மடங்கு அதிகரிப்பது தெரிந்த விஷயம் தான். அதனால் தான் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் தயாரிப்பை மக்களிடம் கொண்டு செல்ல பிரபலமானவர்களை நாடுகின்றன. அந்த வகையில் கோகோகோலா நிறுவனம் இளையதளபதி விஜய், விக்ரம் என்று பல பிரபலங்களைக் கொண்டு தங்களின் குளிர்பானத்தை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. இப்போது, ஜெர்மனி வாழ் இந்தியர்களிடம் தங்களின் குளிர்பானத்தை பிரபலப்படுத்த இந்திய உணவை ("தாலி") வைத்து விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்.

ஜெர்மனியில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வாழ்கிறார்கள். 2011 ல் ஜெர்மனி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட, திறமையானவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற "ப்ளூ கார்டு" வைத்திருப்போர்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்களே. இப்படி இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அறிந்து கோகோ கோலா நிறுவனம் ஜெர்மனியில் புது விதமாக தங்களின் குளிர்பானத்திற்கு விளம்பரம் செய்துள்ளது.


அந்த புதிய விளம்பரத்தில் ஒரு இந்தியர் கையில் கோகோ கோலா வைத்திருப்பதுடன், அவர் அருகில் "தாலி" என்ற இந்தி வார்த்தையும் அதற்கேற்றார் போன்ற இந்திய உணவும் இடம் பெற்றுள்ளது. இந்த விளம்பரம் மூலம் அவர்கள் இந்திய மக்களை கவன ஈர்ப்பு செய்யும் அதேவேளையில் ஜெர்மனியில் இருக்கும் இந்திய ரெஸ்டாரெண்ட்களில் "தாலி" உணவை சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது இவர்களுக்கு கிடைத்திருக்கும் பம்பர் பரிசு!

- தினமலர் வாசகர் ஜேசு ஞானராஜ்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 21ல் காப்பிய விழா

செப்., 21ல் காப்பிய விழா...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு...

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

டிஎஸ்பி தற்கொலையில் தூண்டுதல் இல்லை

சென்னை: டிஎஸ்பி விஷ்னுபிரியா, 2015ல் தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் தற்கொலை செய்ததாக விஷ்னுபிரியாவின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். ...

செப்டம்பர் 20,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)