தைவான் தமிழ்ச்சங்கத்தின் பத்தாம் தமிழ் அமர்வு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தைவான் தமிழ்ச்சங்கத்தின் பத்தாம் தமிழ் அமர்வு

ஆகஸ்ட் 08,2019  IST

Comments

 தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் அமர்வின் பத்தாம் அமர்வு தைபே நகரில் உள்ள தைபே தேசிய தொழில் நுட்ப பல்கலைகழகத்தில் கடந்த ஞாயிற்று கிழமை (04 ஆகஸ்ட்) சிறப்பாக நடைபெற்றது. முனைவர். ஜெ. வினாயகம் அவர்கள் தலைமையேற்று அவை முன்னவராக இருந்து வழிநடத்தினார்.

@block@திருக்குற‌ளில் நரம்பியல் கூறுகள்@@block@@

முதலாவதாக 'திருக்குற‌ளில் நரம்பியல் கூறுகள்' என்ற தலைப்பில் நரம்பியல் நிபுணர் பேராசிரியர். செம்மல் மணவை முஸ்தபா அவர்கள் காணொளி வழியாக நேரிடையாக சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் தைவான் தமிழ்ச் சங்கத்திற்கு வாழ்த்துக்களை கூறி தனது உரையை கருத்துப்பரிமாற்றம் நடைபெறும் விதமாக தொடங்கினார். பண்டைய தமிழ் இலக்கிய நூல்கள் கருத்துச்செறிவு மிக்கதாக மட்டுமின்றி பல அறிவியல் கூறுகளையும் கொண்டுள்ளது என்றார். எடுத்துக்காட்டாக திருமூலரின் திருமந்திரம் தொடங்கி அகநானுறு, புறநானுறு, தொல்காப்பியம், திருக்குறள் வரை பல்வேறு நூல்களில் அறிவியல் கூறுகள் செறிந்து காணப்படுகின்றன. தான் ஒரு நரம்பியல் மருத்தவ நிபுணர் என்பதால் தமிழ் இலக்கியங்களில் உள்ள மருத்துவ அறிவியல் கூறுகளை ஆராய்ந்து வருவதாக கூறினார். முக்கியமாக திருக்குறளில் உள்ள நரம்பியல் கூறுகளைஅதிகமாய் ஆராய்ந்து வருவதாக கூறினார்.


எடுத்துக்காட்டாக ''ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்'' என்ற குறளில் தாய் தன் குழந்தையை பெரும் வலிகளுக்குப்பின் பெற்றெடுக்கும்போது அடையும் மகிழ்ச்சி அளவில்லாதது. இதனை உலகில் வேறெந்த இலக்கியத்திலும் கூறப்படவில்லை . இளம்வயதில் அடையும் மகிழ்ச்சி தன் மகன் வளர்ந்து சான்றோன் எனக் கேட்க்கும்போது பேரானந்தமாய் மாறுகிறது. இத்தகைய ஆனந்தத்திற்கு காரணம் மூலையில் சுரக்கும் பல்வேறு வேதிப்பொருட்கள் ஆகும். அதில் முக்கியமானது அனந்தமாய்ட் எனப்படும் வேதிப்பொருள் ஆகும். தாயின் இருவேறு வயதுபருவத்திலும் சுரக்கும் இத்தகைய வேதிப்பொருள், சமீபத்தில்தான் கண்டறியப்பட்டது. ஆனால் நம் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இத்தகைய அறிவியலை குறிப்புகளாக வைத்து திருக்குறளை எழுதியுள்ளர். மேலும் நன்றி மறப்பது நன்றன்று எனத்தொடங்கும் குறளில் உள்ள அறிவியலையும் எடுத்துரைத்தார்.


எது அறிவியல்

இரண்டாவதாக முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி மாணவர் நா. ரஜீஷ் குமார் “எது அறிவியல்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தனது உரையில் அறிவியல் முறை (ண்ஞிடிஞுணtடிஞூடிஞி ட்ஞுtடணிஞீணிடூணிஞ்தூ) என்றால் என்ன என்றும் இன்றைய காலக்கட்டத்தில் நிலவ கூடிய போலி அறிவியல் வாதத்திற்கும் அறிவியலிற்கும் உள்ள முரண்பாட்டை எளிமையாக விளக்கினார். தனி மனித நம்பிக்கைகள் குறிப்பாக மதம், ஆன்மிகம் இவை அறிவியல் ஆகாது என்றும் அடிப்படை ஆதாரம் அற்ற எவற்றையும் அறிவியல் ஏற்காது என்றும் கூறினார். அவர் கூறுகையில், முன்னர் தோன்றிய வானவியல் கண்டுபிடிப்புகளை எப்படி ஜோதிடம் அபகரித்துக்கொண்டது என்பதையும் சமீப காலமாக அதிகரித்துவரும் அறம், வாழ்வியல், மதம் சார்ந்த தத்துவ நூல்களில் உள்ள கருத்துகளில் அறிவியல் இருப்பதாக திரித்து வாதிடும் ஆதாரமற்ற விளக்கங்களையும் விமர்சித்தார். இறுதியாக, அறிவியல் என்பது உண்மையை அறியும் கருவி, அது கேள்வி சோதனை ஆதாரம் என்ற அடிப்படையை கொண்டது, அறிவியல் பொதுத்தன்மை மற்றும் திறந்தமனப்பான்மை வாய்ந்தது, முற்போக்கானது, என்றும் மறுபரிசீலனைக்கு உட்பட்டது என்று கூறி தனது உரையை முடித்தார். உரை முடிந்த பிறகு மாற்று கருத்துகள் விவாதிக்க பட்டது.


தமிழ் மன்னன் ராவணன்

மூன்றாவதாக ஃபூ ஜென் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி மாணவர் கர்ணன் அவர்கள் 'தமிழ் மன்னன் ராவணன்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இன்றளவும் இமயம் முதல் குமாரிவரை எல்லைகளை விவரிக்கும் பாரதத்தை குமாரி தாண்டியும் கட்டி ஆண்ட பேரரசன் இராவணனை காவியங்களின் அசுரனாகவும் அரக்கனாகவும் மட்டுமே தெரிந்து கொண்டு பார் ஆண்ட மன்னனாக பார்க்கத் தவறியதை முன்னிறுத்தி அவர் பேச்சு இருந்தது. மேலும் பாரதிதாசன் கூறிய 'என் தமிழர் மூதாதையர் இராவணன்' என்பதை நிலை நிறுத்தும்படி தமிழ் இலக்கியங்களிலும் காவியங்களிலும் நாடகங்களிலும் மிளிர்ந்த பேரரசன் இராவணன் தமிழ் மன்னன் என்பதை பெருமையுடன் எடுத்துரைக்கும் விதமாக இருந்தது அவர் உரை


நான் கற்ற தமிழின் நிலைநான்காவதாக முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி மாணவர் பென்னி அவர்கள் ' நான் கற்ற தமிழின் நிலை ' என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரின் பேச்சு உரை போல் இல்லாமல் தனது ஆதங்கத்தை தெரிவிக்கும் விதமாகவே இருந்தது. தமிழின் தொடக்கம் பற்றி இன்றளவும் ஆராய்ச்சிகள் தொடர்கிறது . ஆனாலும் அறுதியிட்டு குறை இயலாத அளவில் மிகத்தொண்மையானது தமிழ். அத்தைகய தமிழின் வரலாற்றை வருங்கால தலைமுறைக்கு எடுத்துரைப்பது மிகஅவசியம் ஆகும். மாறாக, நம் பாடப்புத்தகங்கள் பிறநாட்டு, பிறமொழி அறிஞர்களின் வரலாற்றையே எடுத்துரைப்பது வேதனைக்குரியது. பல்வேறு மொழிகளின் தாக்கம் இருந்தாலும் தமிழ் பல்லாயிரம் ஆண்டுகள் தனித்து தழைத்தோங்கி நிற்பது மிகப்பெருமையானது. மேலும் தாய்மொழியாம் தமிழில் கல்விகற்றல் மிக அவசியமானது. தமிழில் பேசுவோம் , தமிழில் சுவாசிப்போம் , தமிழில் வாழ்வோம் என தனது உரையை பேசி முடித்தார்.

இந்நிகழ்ச்சியில் தைவானில் வாழும் தமிழ் ஆர்வலர்கள் பலரும், தைவான் தமிழ்சங்க நிர்வாகிகள் மற்றும் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

- நமது செய்தியாளர் ரமேஷ் பரமசிவம்


Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இன்று மாலை புரந்தரதாசர் நினைவு கர்நாடக கச்சேரி

இன்று மாலை புரந்தரதாசர் நினைவு கர்நாடக கச்சேரி...

இந்தியன் அக்சண்ட், இந்திய உணவகம், நியூயார்க்

இந்தியன் அக்சண்ட், இந்திய உணவகம், நியூயார்க்...

மயூராலயா நாட்டியப் பள்ளி, பிரிஸ்பேன்

மயூராலயா நாட்டியப் பள்ளி, பிரிஸ்பேன்...

லலித கலாலய பரத நாட்டியப் பள்ளி

லலித கலாலய பரத நாட்டியப் பள்ளி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us