சிங்கப்பூர் தேசிய தின விழா கோலாகலம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் தேசிய தின விழா கோலாகலம்

ஆகஸ்ட் 12,2019  IST

Comments

“ நமது இல்லம் – நமது இதயம் – நமது சிங்கப்பூர் “ எனக் கூடியிருந்த இருபத்தைந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் சிவப்பு நிற ஆடை அணிந்து செந்நிற ஐந்து நட்சத்திரக் கொடியசைத்து முழங்க சிங்கப்பூரின் எட்டாவது அதிபர் ஹலிமா யாகூப் சிங்கப்பூரின் 54 ஆவது தேசிய தின அணிவகுப்பைப் பார்வையிட வருகை புரிந்தார். முன்னதாக சிங்கப்பூர் நாடாளு மன்ற நாயகர் டான் கவான் ஜின் – நாடாளு மன்ற உறுப்பினர்கள் புடை சூழ அரங்கம் வந்தார். பிரதமர் லீ சியன் லூங் – துணைப் பிரதமர்கள் – அமைச்சர்களுடன் அணிவகுத்து தேசியக் கொடி அசைத்த வண்ணம் அரங்கத்திற்கு வருகை புரிந்தார்.

இவ்வாண்டு பிரதமர் அழைப்பின் பேரில் அண்டை நாட்டுப் பிரமுகர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத் தகுந்ததாகும். மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது – இந்தோனேஷிய அதிபர் ஜோக்கோ விடோடோ – புருணை சுல்தான் ஹசனல் போல்கியா ஆகியோர் தம்பதி சமேதராகக் கலந்து கொண்டு கவுரவித்தனர். அலைகள் போன்று ஓசை எழுப்பி 21 குண்டுகள் முழங்க அதிபர் வரவேற்கப்பட்டார்.

1700 – 1600 எனப் பலமுறை வான்குடை சாகசங்கள் நிகழ்த்திய வீரர்கள் வானிலிருந்து பறந்து இறங்கி வந்ததைக் கூடியிருந்த மக்கள் சிகப்பு அலைபோல கொடியசைத்து வரவேற்றது கண்கொள்ளாக் காட்சியாகும். போர்ப் படை விமானங்கள் விண்ணையும் மண்ணையும் அதிர வைத்து கண்ணைப் பறிக்கும் வண்ணம் சாகசக் காட்சிகளைப் படைத்தன. 790 மாணவர்கள் அணிவகுத்து இசைக்கேற்ப மூன்று வடிவங்களை அமைத்துக் கரவொலி பெற்றனர். ஐந்து நட்சத்திர வடிவமைத்து அசத்தினர். முப்படையினர் – கவச வாகனங்கள் வர்ணக் கொடியினரின் அணிவகுப்பு மரியாதையை அதிபர் பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார். சிங்கப்பூரின் 200 ஆம் ஆண்டினைக் குறிக்கும் வரலாற்றை விவரிக்கும் வண்ணம் 38 அணிகளின் அணி வகுப்பும் இடம் பெற்றது. இவை பாரம்பரிய கலாச்சாரச் சின்னங்களாக விளங்கின. போர்க் காலத்தில் பயன்படுத்தும் வாகன அணிவகுப்பு – ஏவு கணை வாகனம் முதலியவை பிரமிப்பூட்டின.

இவ்வாண்டு தேசிய தின விழாவில் 6 மீட்டர் உயரம், 1000 கிலோ எடையுள்ள உலோகச் சிங்கம் பெரிய காட்சிப் பொருளாக விளங்கியது

பரத நாட்டியம் மற்றும் பல இன இசை நிகழ்ச்சிகளுடன் யுரேஷிய நடனமும் நடைபெற்றன.அனைவரும் ஒன்றுபட்டு உயர்வோம் என்ற கருப்பொருளில் இவை அமைக்கப்பட்டடிருந்தன. இவையனைத்தையும் பார்த்து மகிழ்ந்த அதிபர் நிகழ்வு நிறைவில் கலைஞர்களின் பகுதிக்கே சென்று பாராட்டி வாழ்த்தியமை நெஞ்சுருகச் செய்தது. நிறைவாக வான வேடிக்கை – பல வண்ண – பல்சுவைக் காட்சிகளாக மிளிர்ந்தன. நிகழ்வனைத்தையும் சிங்கப்பூர்த் தொலைக் காடசி நேரலையாக ஒளி பரப்பியது. ஒவ்வொரு நிகழ்வையும் சுவைபட ரபி அஹமதுவும் சிவரஞ்சனியும் தொகுத்து வழங்கினர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இன்று மாலை புரந்தரதாசர் நினைவு கர்நாடக கச்சேரி

இன்று மாலை புரந்தரதாசர் நினைவு கர்நாடக கச்சேரி...

இந்தியன் அக்சண்ட், இந்திய உணவகம், நியூயார்க்

இந்தியன் அக்சண்ட், இந்திய உணவகம், நியூயார்க்...

மயூராலயா நாட்டியப் பள்ளி, பிரிஸ்பேன்

மயூராலயா நாட்டியப் பள்ளி, பிரிஸ்பேன்...

லலித கலாலய பரத நாட்டியப் பள்ளி

லலித கலாலய பரத நாட்டியப் பள்ளி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us