ஶ்ரீ ராமருக்கு எழில்மிகு வெள்ளி கவசம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஶ்ரீ ராமருக்கு எழில்மிகு வெள்ளி கவசம்

ஆகஸ்ட் 13,2019  IST

Comments

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ சீதாலட்சுமி சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு பிரம்மாண்ட முழு உருவ வெள்ளி கவசம் சாற்றும் விழா ஆகஸ்டு 12 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. ஆலயத் தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார் ஏற்பாட்டில் பக்தப் பெருமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட இக்கவச விழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கவச பாகங்களைச் சிரமேற் கொண்டு ஆலயம் வலம் வந்து பயபக்தியோடு சமர்ப்பித்தனர்.

விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்குச் சாற்றி மகா தீபாராதனை நடைபெற்ற போது பக்தர்கள் மெய் மறந்து “ ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு ஜே “ என முழக்கமிட்டனர். ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி வெள்ளிக் கவசம் அணிந்து காட்சியளித்து அருள்பாலித்தது மெய் சிலிர்க்க வைத்தது. கலந்து கொண்ட பக்தப் பெருமக்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இன்று மாலை புரந்தரதாசர் நினைவு கர்நாடக கச்சேரி

இன்று மாலை புரந்தரதாசர் நினைவு கர்நாடக கச்சேரி...

இந்தியன் அக்சண்ட், இந்திய உணவகம், நியூயார்க்

இந்தியன் அக்சண்ட், இந்திய உணவகம், நியூயார்க்...

மயூராலயா நாட்டியப் பள்ளி, பிரிஸ்பேன்

மயூராலயா நாட்டியப் பள்ளி, பிரிஸ்பேன்...

லலித கலாலய பரத நாட்டியப் பள்ளி

லலித கலாலய பரத நாட்டியப் பள்ளி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us