சிங்கப்பூரில் புத்தகப் பரிசளிப்பு விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் புத்தகப் பரிசளிப்பு விழா

ஆகஸ்ட் 19,2019  IST

Comments

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் ஆனந்த பவன் உணவகமும் இணைந்து நடத்திய பத்தாம் ஆண்டு ஆனந்த பவன் மு.கு.இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசளிப்பு விழா உணவக வளாக அரங்கில் ஆகஸ்டு 18 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருவாட்டி இராமச்சந்திரா குத்து விளக்கேற்ற – தமிழ் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது. கழகத் துணைத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமை ஏற்றார். சிங்கப்பூர் இந்தியர் சங்கத் தலைவரும் ஜோர்டானுக்கான சிங்கப்பூரின் பொது தூதருமான கி.கேசவபாணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கவுரவித்தார்.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் சிறந்த கட்டுரை – கதை – கவிதை – சிறுகதை நூல்களில் ஒன்றுக்குப் போட்டி வைத்து அதில் சிறந்த நூலுக்கு மு.கு.இராமச்சந்திரா குடும்பத்தினர் வழங்கும் 2000 சிங்கப்பூர் வெள்ளிப் பரிசுத் தொகை விழாவை நடத்தி வருகிறது. இந்த வரிசையில் இவ்வாண்டு சிறுகதை நூலுக்கான பரிசுப் போட்டி நடத்தப்பட்டது. இந்தியா – மலேசியா – சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று நடுவர்கள் ஆய்வு செய்து பரிசுக்கான நூலைத் தேர்ந்தெடுப்பர்.

இவ்வாண்டு ஐந்து சிறுகதை நூல்கள் போட்டிக்கு வந்தன. இவற்றை ஆய்வு செய்த நடுவர்கள் ஒருமனதாக பிரேமா மகாலிங்கம் எழுதிய “ நீர்த்திவலைகள் “ என்ற நூலைப் பரிசுக்குரிய நூலாகத் தேர்ந்தெடுத்தனர். பலத்த கரவொலிக்கிடையே பிரேமா மகாலிங்கத்திற்குப் பொன்னாடை போர்த்தி பரிசுத் தொகைக்கான காசோலையை சிறப்பு விருந்தினர் அளித்து வாழ்த்தினார். விழாவில் “ சங்கம் – தமிழ்ச் சுரங்கம் என்ற தலைப்பில் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் இலக்கியச் சிற்றுரை நிகழ்த்தினார். கலித்தொகை – குறுந்தொகை – நற்றினை – கம்பன் எனப் பல்வேறு இலக்கிய மேற்கோள்களைத் தமிழ்ச்சுரங்கத்திலிருந்து எடுத்துக்காட்டி பாரதியாரையும் வள்ளலாரையும் முன்னிறுத்தி தமதுரையைச் சுவைபட நிறைவு செய்தார். பரிசு பெற்ற எழுத்தாளர் தமது ஏற்புரையை ஆற்றினார்.

முன்னதாக அமரர் மு.கு.இராமச்சந்திரா வாழ்க்கை வரலாற்றுக் காணொளி திரையிடப்பட்டது. கழகச் செயலாளர் கிருத்திகா வரவேற்புரை ஆற்றியதுடன் நிகழ்வினையும் நெறிப்படுத்தினார். செயலவை உறுப்பினர் கவிஞர் கோ.இளங்கோவன் கவிதைச் சுவையுடன் நன்றி நவில நிகழ்வு இரவு விருந்துடன் நிறைவு பெற்றது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 21ல் காப்பிய விழா

செப்., 21ல் காப்பிய விழா...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு...

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us