தம்மாமில் இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய 73வது இந்திய சுதந்திர தின விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தம்மாமில் இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய 73வது இந்திய சுதந்திர தின விழா

ஆகஸ்ட் 20,2019  IST

Comments

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவின் சார்பில் 73வது இந்திய சுதந்திர தின விழா இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தேசிய துணைத்தலைவர் மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி தலைமையில் தம்மாமில் நடைபெற்றது!

நிகழ்ச்சியினை சிஹாத் ஹலீல் ரஹ்மான் இறைமறை ஓதி துவக்கி வைத்தார்; தமிழ் மாநில பொதுசெயலாளர் ஹபீபு ரஹ்மான் அனைவரையும் வரவேற்று பேசினார்; இந்திய இறையாண்மையை பேணும் வகையில் ஷாரே...ஜஹான்...கி அச்சா....என்னும் ஒற்றுமை கீதம் பாடப்பட்டது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிஹாத் பிளாக் கமிட்டி தலைவர் ஜாஹிர் ஹுசைன் இந்தியன் சோஷியல் ஃபோரம் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார்; எம்முன்னோர்கள் பெற்று தந்த சுதந்திர நாட்டில் முழு சுதந்திரம் பெற்று வாழும் சமூகமாய் நாம் உயர்ந்து நிற்போம் என்னும் பொருள் கொண்ட சுதந்திர தின கவிதையை காயல் சாஹிபு வழங்கினார்.

அல்கோபார் சொல்வேந்தர் தமிழ் மன்றத்தின் நிர்வாகி ஹைதர் அலி, இந்திய ஃபிரட்டர்னிடி ஃபோரம் நிர்வாகி அப்துல்காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்; இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாணம் தேசிய துணைத் தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தம்மாம் பிளாக் கமிட்டி துணைத்தலைவர் சுலைமான் நன்றியுரை கூறினார்; முன்னதாக வேலூர் சிப்பாய் கலகம் காணொளி தொகுப்பு திரையில் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தம்மாம்,கோபார்,சிஹாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் சுதந்திர தின வாழ்த்தினை பகிர்ந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 21ல் காப்பிய விழா

செப்., 21ல் காப்பிய விழா...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு...

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

ஜார்க்கண்டில் பயங்கரவாதி கைது

ராஞ்சி: கடந்த மூன்று ஆண்டுகளாக ஜார்க்கண்ட் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால், தேடப்பட்டு வந்த அல்கொய்தா பயங்கரவாதி முகமது காலிமுதின், இன்று கைது செய்யப்பட்டார். ...

செப்டம்பர் 22,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us