சிங்கப்பூரில் தேசிய தின சிறப்பு நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் தேசிய தின சிறப்பு நிகழ்ச்சி

ஆகஸ்ட் 20,2019  IST

Comments (1)

' சிங்கப்பூரில் தமிழ் வாழும் மொழியாக நிலைக்கும் – நீடிக்கும். தமிழ் மொழி விழா எதிர் காலத் தலைமுறையினரிடையே தமிழைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரியது “ என அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தமிழ் மொழி விழாவில் ஆற்றிய உரையை மெய்ப்பிக்கும் வண்ணம் தேசிய தினத்தை யொட்டி சிங்கப்பூர் தமிழ்ப் பட்டி மன்ற கலைக் கழகம் ஆகஸ்டு 18 ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் நடத்திய சிறப்பு நிகழ்ச்சி திகழ்ந்தது. அரங்கம் நிறைந்து வழிந்த மாணவர்களின் நிகழ்ச்சிகள் கண்கொள்ளாக் காட்சிகளாகும். மாணவர்கள் மேம்பாட்டில் சிறப்பான அக்கரை செலுத்தி வரும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுக் கழக மூத்த தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு இராஜேந்திரன் இந்நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது சாலப் பொருத்தமே..

வாய்மொழி மொழி பெயர்ப்புப் போட்டிகளில் சுமார் 400 மாணவர்களுக்கு மேல் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன. தொடக்க நிலை முதலாம் – இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் மொழி பெயர்த்தனர். மூன்றாம் – நான்காம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் ஐந்தாம் – ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் இயங்கி ஆங்கில வாக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்தனர். முதல் சுற்றில் ஒன்பது நடுவர்கள் பிரிவுக்கு 24 பேர் என இரு அணியாகப் பிரித்து இரண்டாம் சுற்றுப் போட்டிக்கு அனுப்பினர். இவர்கள் மேடையில் முனைவர் ராஜி ஸ்ரீநிவாசனின் விரைவுக் கேள்விக் கணைகளுக்கு விடை பகர்ந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் மூன்று இணை மாணவர்கள் வெற்றி பெற்று பரிசுகளை அள்ளிச் சென்றனர்.

இது தமிழ்ப் பட்டி மன்றக் கழகம் நான்காவது வருடமாக கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் நடத்தும் நிகழ்வாகும் கற்றல் வளர்ச்சிக் குழு அலுவலர்கள் – அரசு பாடத் திட்ட வரைவு அதிகாரி வேணுகோபால் – வளர் தமிழ் இயக்க மேனாள் தலைவர் இரா.ராஜாராம் முதலியோர் நிகழ்வில் பங்கேற்று கவுரவித்தனர்.

முத்தாய்ப்பு நிகழ்வாக “ இரு மொழிக் கற்றல் அனுபவத்தை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்களா ? - இல்லையா ? “ என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது. பயன்படுத்திக் கொள்ளுகின்றனர் என்ற தலைப்பில் நிலா – ஹரிநேத்ரா மற்றும் அக்சயா ஆகியோர் வாதிட்டனர். பயன்படுத்தவில்லை என ஸ்மிருதா – மகிஷா மற்றும் யாழ்பாரதி ஆகியோர் எதிர் வாதிட்டனர் .முனைவர் ராஜி ஸ்ரீநிவாசன் நடுவராகச் செயல்பட்டார். அவர் குறிப்பிட்டது போல தொடக்க நிலை இரண்டு – மூன்றில் படிக்கும் மாணவியர் அசாத்தியத் துணிச்சலோடு வலுவான கருத்துக்களை முன் வைத்து வாதாடி நடுவரைத் திக்குமுக்காடச் செய்தனர். நடுவர் தமது தீர்ப்பில் இரு மொழிக் கற்றல் அனுபவத்தை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் . வற்புறுத்தலாயினும் பழக்கம் பின்னர் வழக்கமாகி விடும் – மேலும் முயற்சி எடுப்போம் எனக் குறிப்பிட்டார். முன்னதாகப் பட்டி மன்றக் கலைக் கழகத் தலைவர் கவிஞர் யூசூப் ராவுத்தர் ரஜீத் வரவேற்புரை ஆற்றினார்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 21ல் காப்பிய விழா

செப்., 21ல் காப்பிய விழா...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு...

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
21-ஆக-201907:10:41 IST Report Abuse
மீனா தேவராஜன் அக்கறை என்பது பெரிசு இங்கே அக்கறை என்பதற்கு அக்கரை என்று எழுதப்பட்டுள்ளது. பிழையைத் திருத்தவும். பிழையுள்ள வரி ' சிங்கப்பூர் அக்கரை செலுத்தி வருகிறது. ' அக்கரை என்றால் அந்தக் கரை அதாவது ஆற்றின் அக்கரை எனப்பொருள்படும்,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us