சுதந்திரத்தினத்தில் மரக்கன்றுகள் பரிசு- சான் ஆண்டோனியோ நிதி உதவி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சுதந்திரத்தினத்தில் மரக்கன்றுகள் பரிசு- சான் ஆண்டோனியோ நிதி உதவி

ஆகஸ்ட் 21,2019  IST

Comments

கஜா புயலின் பாதிப்பை எவராலும் மறக்க இயலாது. காடு-கழனியே வாழ்வாதாராமாய்க் கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அதன் புனரமைப்பு இன்று வரை நடந்துகொண்டே உள்ளது. அதற்காக உலக தமிழ்மக்கள் எல்லோரும் பலவழிகளில் உதவிபுரிந்தனர்.

அவ்வகையில் கடந்த ஜனவரி மாதம் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கமும், அனைத்து இந்திய மக்களும் தாராள நிதிஉதவி செய்தனர். மொய் விருந்தும் நடத்தப்பட்டது. அதனைக் கொண்டு தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அங்கு உதவப்பட்டது.

நிதியின் மற்றொரு பாகத்தை இம்மாத ஆகஸ்ட் 15 ஆம் தேதி நமது சுதந்திர தினத்தன்று, கிட்டத்தட்ட 3000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கள்ளிமேடு, தாமரைக்குளம், அவரைக்காடு மற்றும் தேத்தாகுடி அரசு உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு திரு.இரத்தினராஜ் மற்றும் திரு. ராஜீவ் காந்தி,இவர்களின் பொறுப்பில் நன்கு முறையில் செயல்படுத்திக் கொடுக்கப்பட்டது. இதற்கு 'நலம் நல்கும் நண்பர்கள்' குழு மற்றும் 'பிரைட் இந்தியா' நிறுவனம் நமக்கு உதவி செய்துள்ளது. அவர்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள் ! இதற்கு பல தன்னார்வலர்கள் பெரும் உதவி புரிந்தனர். முன்பே கடலூர்-கருங்குழி கிராமங்களில் சிறுமரக்கன்றுகளாக வாங்கி நர்சரி அமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டது.

இந்நிகழ்வில் மா,பலா,தென்னை,எலுமிச்சை புலி, நெல்லி, கொய்யா, பூவரசு போன்ற மக்களுக்கு பயனுள்ள மரங்கள் வளர்க்க ஆவண செய்யப்பட்டது. இதனால் நிச்சயம் மக்கள் பயனுறுவர் என்பதில் ஐயமில்லை.

உதவிகள் செய்து,அதில் மனமகிழ்ச்சி அடையும் ஆனந்தத்திற்கு ஈடுஇணை ஏதும் இல்லை. தொடர்ந்து உதவிகள் புரிவோம்,இணைந்தே இருப்போம். உதவிகள் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 21ல் காப்பிய விழா

செப்., 21ல் காப்பிய விழா...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு...

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

தமிழும் தேசிய மொழியாகலாம்: பொன்.ராதா

கன்னியாகுமரி: தமிழகத்தை சேர்ந்த பாஜ., முன்னாள் எம்.பி., பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ஒரு தமிழனாக எனது விருப்பம் என்னவெனில், நாம் நமது தமிழ் மொழியை மேம்படுத்த ...

செப்டம்பர் 20,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us